Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Thursday, 31 May 2012

காலிஃப்ளவர் ஸ்டூ குருமா

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் (வேக வைத்தது) - 1 கப்
வெங்காய விழுது - 1 கப்
தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
டால்டா - 50 கிராம்
சீரகம் - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - தேவையானது
மல்லித்தழை - தேவையானது
உப்பு - தேவையானது
தேங்காய் விழுது - 1 கரண்டி

செய்முறை:

டால்டாவைச் சுட வைத்து பெருஞ்சீரகம் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசனை வரும் வரை வதக்கவும். இதில் அரைத்த வெங்காய விழுதைப் போட்டு பச்சை வாசனை போக கிளறி காலிஃப்ளவர், தக்காளி சாஸ், உப்பு போட்டு கொதிக்க விடவும். கடைசியாக, அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு நன்கு கிளறி கருவேப்பிலை, மல்லித்தழை போட்டு இறக்கவும்.

சிக்கன் தோசை-டேஸ்ட்டும் சூப்பரோ சூப்பர்! செஞ்சுத்தான் பாருங்களேன்.....!

கோழிக்கறி - 200 கிராம்
மைதா மாவு - 250 கிராம்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி, பூண்டி விழுது - 2 டீ ஸ்பூன்
காரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* கோழிக்கறியை எலும்பில்லாமல் தேர்வு செய்து துவையல் பக்குவத்தில் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும்.

* அதனுடன் மைதா, அரிசி மாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், காரட் துருவல், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீ­ர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.

* பின்பு தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு மாவை ஊற்ற வேண்டும்.

* மேல் பக்கத்திலும் சிறிது எண்ணெய் விட்டு, நன்றாக வெந்தபின்பு மறுபக்கம் திருப்பி போடவும்.

* இரண்டு பக்கமும் தோசை நன்றாக வெந்ததும் தோசைக் கல்லில் இருந்து எடுத்து விடவும்.

Wednesday, 30 May 2012

சமையல் ஸ்பெஷல்: மீன் பிரியாணி

தேவையான பொருட்கள்:

மீன் - 1/4 கிலோ
அரிசி - 2 ஆழாக்கு
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி இலை - 1/4 கட்டு
மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்
தயிர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/2 குழிக் கரண்டி

செய்முறை:

* மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நீள வாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக்கொள்ளவும்.

* ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.

* வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.

* தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்கவும். தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

* பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் "தம்" சேர்த்து (ஆவி போகாமல் மூடி வைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும்.

* குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும்.

* சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி.

இயற்கை உணவுகளை கூலாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கு

தேவையான பொருட்கள்:

பூசணிக்காய் - 1
அவல் - 1 கிலோ
தயிர் - 4 லிட்டர்
நறுக்கிய குடைமிளகாய் - 100 கிராம்
நறுக்கிய கொத்தமல்லி - 1 கப்
உப்பு, மிளகு - தேவையான அளவு

செய்முறை:

* பூசணிக்காயை விதைகள் நீக்கி சாறு பிழிந்து கொள்ளவும்.

* அந்த சாறுடன் எல்லா பொருட்களையும் சேர்த்து கலக்கவும்.

* பூசணிக்காய் தயிர்அவல் ரெடி!

* விதை இல்லாத பச்சை திராட்சை, மாதுளம்பழம் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பு: உங்கள் தேவைக்கு ஏற்ப தேவையான பொருட்களின் அளவை மாற்றியமைத்துக் கொள்ளவும்.

Tuesday, 29 May 2012

சூடான, சுவையான முட்டை கறி தயார்

தேவையான பொருட்கள்:-

பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
முட்டை - 4
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப

செய்முறை:

* வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

* அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும்.

* எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கி வைத்த வொங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.

* வெங்காயம் லேசாக வதங்கியவுடன் தக்காளி, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.

* இவை நன்றாக வதங்கிய பிறகு 4 முட்டையை அதில் உடைத்து ஊற்றவும்.

* அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு முட்டை அடிபிடிக்காமல் தொடர்ந்து கிளறவும்.

* முட்டைய நன்றாக வெந்தவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும்.

* சூடான, சுவையான முட்டை கறி தயார்.

குறிப்பு: இதை பூரி மட்டுமல்ல, சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம். செம டேஸ்டாக இருக்கும், சாப்பிட்டுட்டுச் சொல்லுங்க.

ஆட்டு மூளை பொரியல்-நீங்களே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க

தேவையான பொருள்கள்:

ஆட்டு மூளை - 2
மிளகாய்தூள் - 1-1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 1/2 கப்
சோம்பு - 1/2 ஸ்பூன்
எண்ணைய் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும்.

* அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும்.

* மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.

* பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.

* வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போடவும்.

* பொன்னிறமாக சிவந்தவுடன் மூளையை இந்த மசாலாவுடன் சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவேண்டும்.

* நன்றாக சிவந்தவுடன் இறக்கி பறிமாறலாம்.

Monday, 28 May 2012

சாதாரண பொங்கல் போல் அல்லாமல் ஓட்ஸ் பொங்கல்

தேவையானப் பொருள்கள்:

ஓட்ஸ் - 2 கப்
பச்சைப் பருப்பு - 3/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

நெய் - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் 1 - டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை:

* முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பை வாசம் வர வறுத்துக் கொள்ளவும்.

* பிறகு குக்கரில் (அ) ஒரு பாத்திரத்தில் பருப்பு வேகும் அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

* பருப்பு முக்கால் பதம் வெந்ததும் அதில் ஒரு பங்கு ஓட்ஸூக்கு இரண்டரை பங்கு தண்ணீ­ர் என 5 கப் தண்­ர் ஊற்றி கொதி நிலை வரும் வரை மூடி வைக்கவும்.

* கொதி வந்ததும் ஓட்ஸைப் போட்டு, தேவையான உப்பும் சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு மூடி வைக்கவும்.

* இரண்டும் நன்றாகக் குழைந்து, வேகும் வரை மிதமானத் தீயில் வைத்திருக்கவும்.

* ஒரு வாணலியில் நெய் விட்டு சூடுபடுத்தவும்.

* அதில் மிளகு(ஒன்றிரண்டாகப் பொடித்து), சீரகம், இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை தாளித்து பொங்கலில் சேர்த்து கிளறி இறக்கவும்.

* அல்லது தாளித்த பிறகு பொங்கலை வாணலியில் சேர்த்து கிளறி இறக்கவும். இந்த முறையில் செய்யும்பொழுது மிகவும் நன்றாக இருக்கும்.

* இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார் இவை மிகப் பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு: சாதாரண பொங்கல் போல் அல்லாமல் ஓட்ஸ் பொங்கல் செய்யும்போது பச்சைப் பருப்பின் அளவைக் கொஞ்சம் கூட்டி செய்தால்தான் நன்றாக இருக்கும்.

Sunday, 27 May 2012

சுவையான வித்தியாசமான பாசிப்பருப்பு பக்கோடா தயார்.

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1 1/2
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி - அரை இன்ச்
தனியா - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

* பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

* பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

* பாசிப்பருப்பு ஊறியதும் தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் தனியா, உப்பு, இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

* அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு பிசைந்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து எண்ணெயில் உதிர்த்து விடவும்.

* இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும்.

* சுவையான வித்தியாசமான பாசிப்பருப்பு பக்கோடா தயார்.

தோசைன்னாலே நமக்கெல்லாம் ஒரே குஷிதான்.. அதிலும் கார தோசைன்னா

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1/2 கப்
துவரம்பருப்பு - 1/4 கப்
தேங்காய் - 1/2 முடி
மிளகாய் - 4
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 10
உப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறு துண்டு
மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* அரிசி, பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிய ரவை பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.

* எண்ணெயில் கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி கலக்கவும்.

* தேவையெனில் சிறிது தண்­ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

* தோசை கல்லில் மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.

* மாவு மீந்து விட்டால், அடுத்த முறை தோசை ஊற்றும்போது மீந்த மாவில் பொடியாக அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து தோசை வார்க்கவும்.

Saturday, 26 May 2012

வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1/2 கப்
வெந்தயக்கீரை - 2 கட்டு
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து, குழையாமல் வேகவையுங்கள்.

* கீரையை சுத்தம் செய்யுங்கள்.

* பூண்டு, வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்குங்கள்.

* எண்ணெயைக் காய வைத்து கடுகு, சீரகம் தாளித்து பூண்டு சேருங்கள்.

* பூண்டு வதங்கியதும் வெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்கள்.

* அத்துடன் கீரை, மிளகாய்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, பருப்பை சேருங்கள்.

* சிறு தீயில் நன்கு வதக்கி எடுக்கும்பொழுது எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து கிளறி இறக்குங்கள்.

* தண்ணியாக இல்லாமல் சிறிது கெட்டியாக இருப்பதுதான், ஸ்பெஷல்.

கோடையில் குளு குளுன்னு இருக்க தர்பூசணி சாப்பிடுங்க.

தேவையான பொருட்கள்:

தர்பூசணி துண்டுகள் - 4
சர்க்கரை (அ) தேன் - சிறிது
மிளகு தூள் - ஒரு சிட்டிகை
சுக்கு தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - அரை சிட்டிகை
ஐஸ் கியுப்ஸ் - 6

செய்முறை:

நான்கு துண்டு தர்பூசணி எடுத்து கொள்ளவும்.

பழத்தை கழுவி, அதில் உள்ள கொட்டைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக அரியவும்.

மிக்சியில் ஐஸ் கியுப்ஸ், சர்க்கரை, உப்பு, மிளகு தூள், சுக்கு தூள் பழம் அனைத்தையும் போட்டு நன்கு அடித்து பெரிய துளையுள்ள வடிகட்டியில் வடித்து குடிக்கவும்.

அப்படி வடிகட்ட முடியவில்லை என்றால், மிக்சியில் அடித்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றிவைத்தால் அடியில் கொட்டைகள் தங்கிடும், மிகவும் கலக்காமல் அப்படியே தெளிந்த மாதிரி டம்ளரில் ஊற்றி பருகவும்.

ஆஹா! என்ன.. ஒரு புத்துணர்வு. கண்ணெல்லாம் குளிர்ந்து விடும்.

குறிப்பு:

தர்பூசணி நல்ல ஒரு நீராகாரம், தாகத்தை தணிக்கும்.

இனிப்பில்லாத தர்பூசணி பழத்தை சின்னதா கட் செய்து அதில் சர்க்கரை சேர்த்து குளிர வைத்து குடித்தாலும் நல்லா இருக்கும்.

இதில் பால் சேர்த்தும் ஜூஸ் தயாரிக்கலாம் பால் சேர்க்கும் போது வெரும் ஐஸ் கட்டி, சர்க்கரை மட்டும் போதும். மாதுளை சேர்த்தும் செய்து குடிக்கலாம்.

இதன் தோலை வீணாக்காமல் சாம்பார் வைக்கலாம். தர்பூஸ் வெட்டிய முழுவதையும் தோலிலிருந்து வெட்டி எடுக்க முடியாது அதற்கு ஒரு மேஜை கரண்டி கொண்டு வழித்தெடுத்தால் ஈசியாக வந்துவிடும்.

தர்பூசணியை கட் செய்து பிரிட்ஜில் வைத்தால் தண்ணீர் அதிகமாக விடும், அது கெட்டியாக கிரிப்பாக இருக்க அரிந்ததும் பீரிஜரில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் தண்ணீர் விடாமல் கிரிப்பாக இருக்கும்.

தால் ரொட்டி

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு -100 கிராம்
கோதுமை மாவு - கால் கிலோ
சிறிய கேரட் - துருவியது
மஞ்சல் பொடி - கால் ஸ்பூன்
மிளகாய் பொடி - கால் ஸ்பூன்
வெங்காயம் - 1
இஞ்சி,பூண்டு பேஸ்ட் - அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2டீஸ்பூன்
செய்முறை

குக்கரில் எண்ணெய் விட்டு பொடியாக கட் செய்த வெங்காயம் சேர்த்து வதக்கி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மஞ்சல்,மிளகாய் பொடி,கேரட் துருவியது சேர்த்து நன்கு வதக்கி பாசிப்பருப்பு சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து நிதானமாக 2 விசில் விட்டு எடுக்கவும்.நன்கு வெந்த பின்பு மசித்துக் கொள்ளவும்.
பின்பு அதனோடு உப்பு, கோதுமை மாவை சேர்த்து தேவைப்பட்டால் தண்ணிர் சேர்த்து பிசைந்து அரை மணி நேரமாவது வைக்கவும்.
அதனை தேவையான அளவிற்கு உருண்டைகளாக்கி சப்பாத்தி கட்டையில் மாவு போட்டு பரத்தி ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும்.விருப்பப்பட்டால் நெய் அல்லது எண்ணெய் விட்டும் சுடலாம்.
சுவையான தால் ரொட்டி ரெடி.இதனை துண்டு போட்டு அப்படியேயும் சாப்பிடலாம்.அல்லது ரைத்தா உடன் சாப்பிடலாம்.

Friday, 25 May 2012

கேரட் குக்கீஸ்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு 1 கப்
காரட் 5
பேக்கிங் பவுடர் 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை 2 கப்
வெண்ணெய் 2 கப்
மைதா 2 கப்
முட்டை 1
வெனிலா 1 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த திராட்சை, முந்திரி 8
உப்பு, நெய் தேவையான அளவு

செய்முறை :

கேரட்டை நன்றாக அவித்து, மசித்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரையையும் வெண்ணெயையும் நன்றாக கடைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் கேரட் மசியலை சேர்க்கவும்.

மைதா, பேக்கிங் பவுடர், உப்பு இவற்றை நன்றாக சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை கேரட் கலவையுடன் கலந்து நன்றாக கடைய வேண்டும். தேவையானால் சிறிது எஸ்சென்ஸ் சேர்த்து கொள்ளலாம்.

பின்னர் இந்த கலவையை சிறிய டப்பாக்களிலோ அல்லது பெரிய தட்டிலோ நெய் தடவி, சிறிது இடைவெளி விட்டு ஊற்ற வேண்டும். அதன் மேற்பரப்பில் முந்திரி, திராட்சை, கிஸ்மிஸ் போன்றவற்றை தூவலாம்.

இதனை 10 முதல் 15 நிமிடம் வரை ஓவனில் வைத்து பேக் பண்ணவும். பின் வெளியில் எடுத்து சிறிது நேரம் ஆறிய பின் பரிமாறலாம்.

வெஜ் ரோல்ஸ்

தேவையானப் பொருட்கள்
மேல்மாவிற்கு:
மைதா மாவு - 1 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
ஈஸ்ட் - அரை தேக்கரண்டி
இளம் சூடான தண்ணீர் - கால் கப்
சீனி - ஒரு தேக்கரண்டி
பூரணத்திற்கு:
உருளைக்கிழங்கு - 2
தக்காளி - ஒன்று
கேரட் - ஒன்று
கோஸ், லீக்ஸ் கலவை - ஒரு கப்
வெங்காயம் - பாதி
உள்ளி - 4 பற்கள்
கடுகு, பெரிய சீரகம், கறுவா(பட்டை), கிராம்பு, ஏலம் - சிறிது
மிளகாய் தூள் - ஒரு மேசைகரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்
கோஸ், லீக்ஸ் கலவை - ஒரு கப்
கறிவேப்பிலை - சிறிது
தண்ணீர் - 2 கப்
எண்ணெய் - அரை லிட்டர் பொரிப்பதற்கு


தக்காளி, உருளைக்கிழங்கினை சிறு சதுர துண்டுகளாக வெட்டவும். காரட்டை மெல்லிய சிறு துண்டுகளாக வெட்டவும் அல்லது துருவி வைக்கவும். கோஸ், லீக்ஸ் இரண்டையும் மெலிதாக அரிந்து வைக்கவும். வெங்காயம், உள்ளியை பொடியாக வெட்டி வைக்கவும். கறுவா(பட்டை), கிராம்பு, ஏலத்தை வெறும் சட்டியில் வறுத்து பொடித்து வைக்கவும்.




இளம் சூடான தண்ணீரில் சீனியை கரைத்து அதில் ஈஸ்ட்டை போட்டு 10 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் மைதா மாவினை அரித்தெடுத்து(சலித்து) உப்புடன் கலந்து வைக்கவும். பின்னர் நொதித்த ஈஸ்ட் கலவையை மாவுடன் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல பிசையவும். தேவைப்படின் சிறிது தண்ணீர் சேர்க்கவும். பின்னர் பிசைந்த மாவினை உருட்டி மூடி 2 மணித்தியாலங்கள்(மணிநேரங்கள்) வைக்கவும்.


ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, பெரிய சீரகம், வெட்டிய உருளைக்கிழங்கு, வெங்காயம், உள்ளி ஆகியவற்றைப் போட்டு 5 நிமிடங்களுக்கு வதக்கவும். பின்னர் அதனுள் வெட்டிய கோஸ், லீக்ஸ், கேரட்டை சேர்த்து கிளறி மூடி 5 நிமிடங்களுக்கு அவிய விடவும்.


பின்னர் வெட்டிய தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் விட்டு கலந்து மூடி வேக விடவும். தண்ணீர் ஓரளவு வற்றியதும் பொடித்து வைத்த ஏல கலவையை சேர்த்து கிளறவும். தண்ணீர் நன்கு வற்றி கறி சுருண்டு வந்ததும் இறக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்.


பின்னர் குழைத்து வைத்த மாவினை எடுத்து திரும்பவும் நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பின்னர் ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி போல தேய்த்து கொள்ளவும்.






தேய்த்த மாவின் ஒரு பக்கத்தில் ஒன்று அல்லது ஒன்றரை மேசைக்கரண்டி கறியை நீளவாக்கில் வைக்கவும். பின்னர் இரு பக்க கரையிலும் உள்ள மாவினை கறியின் மேலே வருமாறு மூடவும். (இப்போது செவ்வக வடிவில் இருக்கும்)









பின்னர் மாவினை கறியுடன் சேர்த்து இழுத்து உருட்டவும். (இது உருளை வடிவில் இருக்கும்).





ஒரு பிரஷ்ஷால் சிறிது தண்ணீரை இதன் மேலே பூசி ரஸ்க் தூளில்(Bread crumps) போட்டு பிரட்டவும்.










பிரட் தூள் உருளை முழுவதும் ஒட்டும்படி நன்கு பிரட்டி எடுத்து, ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும்.






இதேபோல் அனைத்து மாவையும் சப்பாத்திகளாக தேய்த்து, உள்ளே மசாலா வைத்து, உருட்டி, ப்ரட் துகள்களில் தேய்த்து எடுத்து வைக்கவும்.










பின்னர் ஒரு பாத்திரத்தில் 1/2 லீட்டர் எண்ணெயை விட்டு, அது நன்கு கொதித்ததும் அதனுள் இந்த ரோல்சினை ஒன்று அல்லது இரண்டாக போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.







இப்போது சுவையான வெஜ்-ரோல்ஸ் தயார். இதனை தக்காளி சாஸ்/கெட்ச்-அப்புடன் பரிமாறலாம்.







குறிப்பு;
மாவினை பிசைந்து உருட்டி மூடி 2 மணித்தியாலங்கள் வைத்திருந்து எடுக்கும் போது அது நன்கு ஊதியிருக்கும் (ஈஸ்ட் சேர்த்திருப்பதால்) எனவே அதனை திரும்பவும் பிசைதல் அவசியம். க

ட்ரை பண்ணிப் பார்த்திட்டு ஆஹா அற்புதம்னு சொல்லுவீங்க பாருங்க....!

தேவையான பொருட்கள்:

மசாலா அரைத்துக்கொள்ள:

வெங்காயம் - 2
பேல் பூரி - 1
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 5
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை

செய்முறை:

* வெங்காயம், பேல் பூரி, மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், மஞ்சள்பொடி ஆகியவற்றை சுடுநீரில் ஊற வைத்து, கெட்டிவிழுதாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* காலிப்ளவர் பெரிய துண்டுகளாக, சுத்தப்படுத்தி, உரித்த பட்டாணி 2 கப் சேர்த்து, தண்ணீரில் இரண்டையும் கொதிக்க விடவும்.

* வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணை வைத்து சூடானதும், ஒரு துண்டு பட்டை புளி, கிராம்பு, 1 ஸ்பூன் சோம்பு பொரித்து, அத்துடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து, தணிந்த தீயில் எண்ணை பிரிந்து வரும் வரை வதக்கவும்.

* பிறகு கொதிக்க வைத்த காலிப்ளவர், பட்டாணி சேர்த்து, உப்பு, 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

* தக்காளி சாஸ் அரை கப், கலந்து, சில நிமிடம் கிளறியதும் கொத்தமல்லி, கருவேப்பிலை தூவி, சூடாக பரிமாறவும்.

* பட்டாணி சேர்த்த பின் பனீர் துண்டுகளும் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

* இந்த மசாலா எல்லா வகை சாதம், டிபன் வகைகளுக்கும் மிகவும் நன்றாக இருக்கும்.

வெந்தயக்கீரைச் சப்பாத்திக்குச் சிறந்த இணை பாசிப்பருப்பு தால்

தேவையான பொருட்கள்....

வெந்தயக்கீரை- ஒரு கட்டு

கோதுமை மாவு- 2 டம்ளர்

பச்சைமிளகாய்- 6

காரப்பொடி- 1 டீஸ்பூன்

கரம்மசாலாப்பொடி- 1 டீஸ்பூன்

சீரகம்- 1 டீஸ்பூன்

ஓமம்- 1/4 டீஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

எண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை... • வெந்தயக்கீரையை மண் போக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் கோதுமை, வெந்தயக்கீரை, தேவையான அளவு உப்பு, சீரகம், பச்சைமிளகாய், கரம்மசாலப்பொடி, காரப்பொடி, ஓமம் ஆகியனவற்றை போட்டு கலந்து அதில் சுடு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக்கொள்ளவும்.

• அரை மணி நேரம் பிசைந்த மாவைத் தனியே ஊற வைக்கவும்.

• உருண்டைகளாக இட்டு வட்டமாகத் தேய்த்து சப்பாத்திக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு எடுக்கவும். சப்பாத்தி சிவந்தவுடன் இரு புறமும் மாற்றி மாற்றிப் போட்டு சிவக்க எடுக்கவும்.

குறிப்பு....

• வெந்தயக்கீரைச் சப்பாத்திக்குச் சிறந்த இணை பாசிப்பருப்பு தால்.

• வெந்தயக்கீரைக்குச் சொன்ன முறையில் கீரையையும் கீரைச்சப்பாத்திகளாகச் செய்து பார்க்கலாம்.

ஆலு பரோட்டா

தேவையான பொருட்கள்

மாவை குழைக்க:
மைதா - ஒரு கப்
பட்டர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
பால் - இரண்டு மேசக்கரண்டி
பில்லிங் செய்ய
பொடேடோ - ஒன்று (வேகவைத்து மசித்தது)
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
சீரக தூள் - கால் தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு பின்ச்
கொத்து மல்லி தழை - 2 மேசை கரண்டி ( பொடியாக நருக்கியது)
எண்ணை+ பட்டர் (அ) நெய் கலவை - பொரிக்க தேவையன அளவு
செய்முறை

மாவை குழைத்து கொள்ளுங்கள்.
பொடேடோவில் கலக்க வேண்டிய அனைத்து பொருட்களையும் நல்ல் மசித்து கொல்ளுங்கள்.
சிறிய உருண்டையை வைத்து வட்ட வடிவில் (அ) சதுர வடிவில் மாவைதேய்த்து அதி இந்த பில்லிங்கை பரவலாக வைத்து சதுர வைவாக மூடி இருபக்கமும் மாவை தடவி முஈண்டும் மெதுவாக தேய்க்கவும்.
தேய்த்து தவ்வாவில் எண்ணை பட்டர் (அ) நெய் கலவையை கொஞ்சமா ஊற்றி ஒரு ஒரு பரோட்டாவாக பொரித்தெடுக்கவும்.

Thursday, 24 May 2012

கீரை பச்சடி

ஏதாவது ஒரு கீரை - 1 கட்டு
வெங்காயம் - 1 சிறியது
தயிர் - 150 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் 2 ஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டேபில்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2

செய்முறை :

* வெங்காயம், கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ள பொருட்களைப் போட்டு தாளித்து பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் வதங்கியதும் கீரை, தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வேகவைக்கவும்.தண்ணீர் ஊற்ற கூடாது.

* கீரை நன்கு வெந்ததும் ஆறவைத்து தயிரில் கலக்கி பறிமாறவும்.

குறிப்பு....

கீரை விடும் நீர் வற்றும் வரை கீரையை வதக்க வேண்டும். விருப்பப்பட்டால் தயிரில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் அரைத்து சேர்க்கலாம்.

பாகற்காய் ரோஸ்ட் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

நீள பாகற்காய் - 1/4 கிலோ
கடலைமாவு - 1/2 கப்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
ரீபைண்ட் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* பாகற்காயை விரல் நீளத்திற்கு குறுக்காக மூன்று துண்டுகளாக நறுக்கவும், அவை ஒவ்வொன்றையும் நான்காக வகிர்ந்து கொள்ளவும். முழுவதுமாகக் கீறாமல் சிறிது நீளத்திற்கு மட்டும் கீற வேண்டும்.

* சிறிது தண்ணீர் சேர்த்து, ஒரு சுளை புளி போட்டு அரை வேக்காடாக வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.

* கடலைமாவை வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக்கொண்டு, அத்துடன் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கிளறி, ஒவ்வொரு பாகற்காய் துண்டுக்குள்ளும் நன்றாகத் திணித்து வைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பாகற்காய்களைப் போட்டு சில நிமிடங்கள் மூடி வைத்து வெந்ததும், திருப்பிவிட்டு முறுகவிட்டு எடுக்கவும். கறிவேப்பிலை இலைகளை பொரிய விட்டுத் தூவி சுவை சேர்க்கலாம்.

* நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

இதோ சூடான சுவையான நண்டு வறுவல் ரெடி!!!

நண்டு வறுவல் ஒரு காரசாரமான சௌத் இந்தியன் செட்டிநாடு ரெசிபி.

தேவையான பொருட்கள் :

நண்டு – ஒரு கிலோ
பெரிய வெங்காயம் – இரண்டு
தக்காளி – இரண்டு
இஞ்சிபூண்டு விழுது – 1 ஸ்பூன்
தேங்காய் – அரை மூடி
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – நான்கு ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முதலில் நண்டை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சிபூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் சேர்த்து மிளகாய் வாசம் போகும் வரை வதக்கவும். அத்துடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்க்கவும்.

இறுதியில் நண்டை அதில் போட்டு அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு தண்ணீர் வற்றியதும் இறக்கவும். இதோ சூடான சுவையான நண்டு வறுவல் ரெடி!!!

பழ பாயசம்-டயட்டில் இருப்பவர்கள் இதனைச் செய்து சாப்பிடலாம்.

தேவையானவை:

ஆரஞ்சு – 1
அன்னாசி – 2 துண்டுகள்
மாதுளை முத்துக்கள் – கால் கப்
சிறிய கொய்யா – 1
திராட்சை – 20
பால் – ஒரு கப்
சுகர் ஃப்ரீ சர்க்கரை – தேவையான அளவு
சேமியா – 100 கிராம்.

செய்முறை:

* ஆரஞ்சை கொட்டை நீக்கிக்கொள்ளவும்.

• கொய்யா, அன்னாசி பழத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

• பாலை காய்ச்சி ஆறவைக்கவும்.

• பழங்களை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டவும்.

• வடிகட்டிய ஜுசுடன் காய்ச்சி ஆற வைத்த பால், சுகர் ஃப்ரீ சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து தனியே வைக்கவும்.

• பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, கொதித்ததும் சேமியாவை சேர்த்து வேக வைத்து இறக்கி, ஜூசுடன் சேர்த்து நன்கு கலந்தால், பழ பாயசம் ரெடி

குறிப்பு: டயட்டில் இருப்பவர்கள் ஸ்வீட் சாப்பிட ஆசைப்படும்போது குறைந்த கலோரிகள் உள்ள இதனைச் செய்து சாப்பிடலாம்.

வெள்ளை பணியாரம் வெங்காய சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 500 கிராம்,
குண்டு உளுத்தம் பருப்பு - 125 கிராம் (4க்கு 1),
பால் - 1 கரண்டி,
சர்க்கரை - 2 தேக்கரண்டி,
உப்பு - 2 தேக்கரண்டி,
ஆப்ப சோடா - 1/4 தேக்கரண்டி.
செய்முறை

அரிசியையும் உளுந்தையும் ஒன்றாக 2 மணிநேரம் ஊற வைத்து நைசாக அரைக்கவும்.
அரைத்த மாவுடன், பால், சர்க்கரை, உப்பு, ஆப்ப சோடா சேர்த்து கலக்கி 1/2 மணி நேரம் வைக்கவும். (மாவு தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்).
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஒரு சின்ன கரண்டியால் மொண்டு ஊற்றவும்.
அரி கரண்டியால் எண்ணெயை பணியாரத்தின் மேலே அள்ளி ஊற்ற, உப்பி வரும்.
வெள்ளையாக இருக்கும் போதே, திருப்பி விட வேண்டும்.
மறுபுறமும் சிவக்காமல் வெள்ளையாக இருக்கும் போதே எண்ணெயை வடித்து எடுக்கவும்.
அப்படியே எல்லா மாவையும் ஊற்றி எடுக்கவும்.

குறிப்பு:

1) முக்கியமான விஷயம், மாவு தோசைப்பதத்திற்கு மேல் கெட்டியாகவோ, தண்ணீராகவோ இருக்க கூடாது. 2) சிவக்க விட கூடாது. 3) 3 அங்குல விட்டத்தில் இருந்தால் போதுமானது. 4) மாவை ஒரே முறையாக ஊற்ற வேண்டும், நிறுத்தி நிறுத்தி ஊற்றக்கூடாது. 5) ஒரு முறைக்கு ஒன்று தான் ஊற்ற வேண்டும். 6) சுட சுட சூடாக வெங்காய சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

சுவையான கோதுமை மசாலா வடை தயார்

கோதுமை மசாலா வடை
தேவையானப் பொருட்கள்;

* கோதுமை ரவை - ஒரு கப்
* வெள்ளை உளுந்து - 1/2 கப்
* பெரிய வெங்காயம் - 1/2 கப்
* பச்சைமிளகாய் - 2
* இஞ்சி - ஒரு சின்ன துண்டு
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* உப்பு - தேவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
step 1
கோதுமை ரவை மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அரைப்பதற்கு சற்று முன் எடுத்து தண்ணீரை வடித்து பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
step 2
ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு மற்றும் அரை டீஸ்பூன் உப்பு போட்டு நன்கு ஒன்றாகும்படி கலந்து வைக்கவும்.
step 3
பிழிந்து வைத்துள்ள கோதுமை ரவை மற்றும் உளுந்தை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுது ஒன்றிரண்டாக இருந்தாலும் பரவாயில்லை.
step 4
அரைத்த மாவுடன், உப்பு சேர்த்து கலந்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் கலவையை எடுத்து பிழிந்து விட்டு போடவும். ருசி பார்த்து விட்டு தேவையானால் உப்பு போட்டுக் கொள்ளவும்.
step 5
மாவுடன் வெங்காய கலவை ஒன்றாக சேரும்படி நன்கு கலந்துக் கொள்ளவும்.
step 6
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்த மாவை வடை போல தட்டியோ அல்லது விரும்பிய வடிவத்திலோ செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். எண்ணெய் சூடாகும் வரை அடுப்பை நன்றாக எரியவிட்டு, வடைகளை போட்டு பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.
step 7
சுவையான கோதுமை மசாலா வடை தயார்.

கேரட் வடை இருபுறமும் வெந்து பொன்னிறமானதும் தக்காளி சாஸுடன் பரிமாறவும்

தேவையானப் பொருட்கள்
துருவிய கேரட் - ஒரு கப்
கடலை மாவு - 2 ஸ்பூன்
மைதா - ஒரு ஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
பொடியாக நறுக்கிய புதினா - 1/2 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1/2 கப்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 1/4 கப்
உப்பு - 1/2 ஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 1/2 கப் (பொரித்து எடுக்க)
கடலைப்பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து எடுத்து கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறிய உருண்டையாக எடுத்து வடைகளாக தட்டி போடவும்
வடை இருபுறமும் வெந்து பொன்னிறமானதும் எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

கோபி ஸ்டஃப்ட் சப்பாத்தி ரெடி

தேவையான பொருட்கள்;
கோதுமை மாவு -- 2 கப்
காலிப்ளவர் -- 1/2 கப் (துருவியது)
கொத்தமல்லி தழை -- 1/4 கப் (பொடிதாக நறுக்கியது)
புதினா தழை -- 15 இலைகள் (பொடிதாக நறுக்கியது)
மஞ்சள் தூள் -- 3 சிட்டிகை
தனியா தூள் -- 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -- 1/4 டீஸ்பூன்
உப்பு -- தே.அ
செய்முறை;
கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1/2 மணி ஊறவைக்கவும்.
வாணலியில் காலிப்ளவரை போட்டு ஒரு வதக்கு வதக்கி பின் உப்பு, மஞ்சள்தூள், தனியா தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி அதனுடன் கொத்தமல்லி தழை, புதினா இலையை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி இறக்கி ஆறவைக்கவும்.
கொஞ்சம் ஆறியதும் சப்பாத்தி மாவை சிறு உருண்டையாக உருட்டி சப்பாத்தியாக இட்டு அதில் இந்த காலிப்ளவர் கலவையை வைத்து நன்கு மூடி நன்கு தேய்க்கவும்.
பின் தோசைக்கல்லில் சப்பாத்தியை போட்டு நெய்/எண்ணைய் விட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும்.
ரெடி.

:முட்டை உருளை மசாலா

தேவையான பொருட்கள்:-

முட்டை - 2
உருளைக்கிழங்கு - 200 கிராம்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன் (தூள்)
வினிகர் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது)
எண்ணெய் - 15 கிராம்

செய்முறை:-

முட்டையை நன்கு வேக வைத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். எண்ணெயில் மிளகு, சீரகம் வறுத்து, அதில் நறுக்கிய வெங்காயத்தில் பாதியை போட்டு வதக்கிக் கொள்ளவும். இப்போது உருளைக்கிழங்கு, முட்டையை போட்டு வதக்கவும். சிறிது தண்ணீர் விட்டு, உப்பு போட்டு வதக்கவும். பிறகு மீதியுள்ள வெங்காயத்தை போட்டு பிரட்டி, வினிகர் சேர்த்து இறக்கவும்.

பருப்பு உருண்டை

தேவையான பொருட்கள்:

வறுத்த கடலைப் பருப்பு - 1 கப்.

பயத்தம் பருப்பு - 1 கப்.

அரிசி - 1 கப்.

சர்க்கரை - 2 கப்.

தேங்காய் துறுவல் - கால் கப்.

நெய், ஏலம் - தேவைக்கேற்றப்படி.

செய்முறை:

பொடித்த பருப்பு, அரிசி ஆகியவற்றில் சர்க்கரையை பாகாக செய்து ஊற்றவும்.பின்னர் தேவையான அளவுக்கு தேங்காய் துறுவல், ஏலம் ஆகியவற்றை கலக்கவும்.

பின்னர் நெய் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக்கவும். சூப்பரான இனிப்பு பருப்புஉருண்டை தயார்!

Tuesday, 22 May 2012

சிக்கன் சாண்ட்விச் (குழந்தைகளுக்கு)

தேவையான பொருட்கள்;
1. பன் - 1 (லாங் பன் / சின்ன பன்)
2. மயோனிஸ் - 2 தேக்கரண்டி
3. டொமேடோ கெட்சப் - 1 தேக்கரண்டி
4. தக்காளி - 1/2 (விதை நீக்கியது)
5. ஸ்பினாச் (அ) சாலட் கீரை - 2 இலை
6. சமைத்த சிக்கன் துண்டு - 1/2 கப் (உங்களுக்கு பிடித்த மாதிரி சமைத்து வைக்கவும்)
செய்முறை;
பன்'ஐ இரண்டாக நீலமாக வெட்டி வைக்கவும்.
சிக்கன் சிரிதாக நறுக்கி வைக்கவும்.
கீரை, தக்காளி நறுக்கவும்.
ஒரு பாதியில் மயோனிஸ் தடவவும்.
மறு பாதியில் டொமேடோ கெட்சப் தடவவும்.
அதன் மேல் ஒரு வரிசை தக்காளி துண்டுகள் வைத்து, அதன் மேல் சிக்கன் துண்டுகள் வைத்து, அதன் மேல் கீரை வைத்து மற்றொரு பாதி பன்'ஆல் மூடி சாண்ட்விச் மேக்கரில் 1 நிமிடம் வைத்து எடுக்கவும்.

கிராமத்து கறி குழம்பு

தேவையான பொருட்கள்

1. ஆட்டுகறி - 3/4 கிலோ
2. வெங்காயம், பொடியாக நறுக்கியது - 1 (அ) சின்ன வெங்காயம் - 10
3. தக்காளி, பொடியாக நறுக்கியது - 1
4. கறிவேப்பிலை, கொத்தமல்லி
5. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
6. மிளகாய் வற்றல் - 10
7. தனியா - 1 மேஜைக்கரண்டி
8. மிளகு - 2 தேக்கரண்டி (விரும்பினால்)
9. பட்டை, லவங்கம்
10. கசகசா - 1 தேக்கரண்டி
11. ஏலக்காய் - 1 (விரும்பினால்)
12. தேங்காய், பொடியாக நறுக்கியது - 1/4 கப்
13. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
14. உப்பு
15. பூண்டு - 5 பல்
16. சோம்பு - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
செய்முறை

கறியை தனியாக தண்ணீர் சிறிது விட்டு வேக விடவும்.
கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், தனியா, மிளகு எல்லாம் தனி தனியாக வறுத்து வைக்கவும்.
இதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
பாத்திரத்தில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
இதில் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
பின் வேக வைத்த ஆடுக்கறியை அந்த தண்ணீருடன் தக்காளியுடன் சேர்க்கவும்.
இதில் அரைத்த விழுது, மஞ்சள் தூள், தண்ணீர், உப்பு சேர்த்து எண்ணெய் திரண்டு வரும்வரை கொதிக்க விடவும்.
கடைசியில் எண்ணெயில் வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் விட்டு எடுக்கவும்.

சுவையான கோதுமை மசாலா வடை தயார்.

தேவையானப் பொருட்கள்;

* கோதுமை ரவை - ஒரு கப்
* வெள்ளை உளுந்து - 1/2 கப்
* பெரிய வெங்காயம் - 1/2 கப்
* பச்சைமிளகாய் - 2
* இஞ்சி - ஒரு சின்ன துண்டு
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* உப்பு - தேவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
step 1
கோதுமை ரவை மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அரைப்பதற்கு சற்று முன் எடுத்து தண்ணீரை வடித்து பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
step 2
ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு மற்றும் அரை டீஸ்பூன் உப்பு போட்டு நன்கு ஒன்றாகும்படி கலந்து வைக்கவும்.
step 3
பிழிந்து வைத்துள்ள கோதுமை ரவை மற்றும் உளுந்தை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுது ஒன்றிரண்டாக இருந்தாலும் பரவாயில்லை.
step 4
அரைத்த மாவுடன், உப்பு சேர்த்து கலந்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் கலவையை எடுத்து பிழிந்து விட்டு போடவும். ருசி பார்த்து விட்டு தேவையானால் உப்பு போட்டுக் கொள்ளவும்.
step 5
மாவுடன் வெங்காய கலவை ஒன்றாக சேரும்படி நன்கு கலந்துக் கொள்ளவும்.
step 6
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்த மாவை வடை போல தட்டியோ அல்லது விரும்பிய வடிவத்திலோ செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். எண்ணெய் சூடாகும் வரை அடுப்பை நன்றாக எரியவிட்டு, வடைகளை போட்டு பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.
step 7
சுவையான கோதுமை மசாலா வடை தயார்.

மீன் தொக்கு

தேவையான பொருட்கள்

1. மீன் - 1/2 கிலோ (ஃபில்லெட்ஸ் துண்டுகள்)
2. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
3. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
4. மிளகாய் வற்றல் - 2
5. பச்சை மிளகாய் - 2
6. புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
7. இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
8. மிளகு தூள் - 1 தேக்கரண்டி (விரும்பினால்)
9. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
10. தனியா தூள் - 3 தேக்கரண்டி
11. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
12. கடுகு - 1/2 தேக்கரண்டி
13. கருவேப்பிலை, கொத்தமல்லி
14. உப்பு
செய்முறை

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு பச்சை வாசம் போனதும், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து உடைய வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து பிரட்டவும்.
தண்ணீர் 1/2 கப் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போக கொதிக்க விட்டு, மீன் துண்டு, புளி கரைசல் சேர்க்கவும்.
நன்றாக மீன் வெந்து, நல்லா மசாலா கெட்டி ஆனதும் இறக்கிவிடவும்.

சுலபமான, சுவையான சில்லி பரோட்டா ரெடி.

தேவையான பொருட்கள்;
மைதா - 1 கப் (200 கிராம்),
பெரிய வெங்காயம் - 1,
குட மிளகாய் - 1,
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி,
தக்காளி சாஸ் - 3 தேக்கரண்டி,
சிவப்பு கலர் கேசர் பவுடர் - 1/2 தேக்கரண்டி,
இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
சர்க்கரை - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை;
வெங்காயம், குட மிளகாயை சது துண்டுகளாக நறுக்கி உதிர்த்து வைக்கவும்.
மைதாவை சிறிது உப்பு, ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ரொம்ப மெலிதாகவோ, மொத்தமாகவோ இல்லாமல் சப்பாத்திகளாக தேய்த்து, நான்காக மடித்து தேய்த்து வைக்கவும்.
தோசைக்கல்லை காய வைத்து, சப்பாத்திகளை சிவக்காமல், இருபுறமும் வெள்ளையாக இருப்பது போல் சுட்டு எடுக்கவும்.
சுட்ட சப்பாத்திகளை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், குட மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வதக்கும் போதே மிளகாய் தூள், சிவப்பு கலர் கேசரி பவுடர், சோயா சாஸ், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும், நறுக்கிய சப்பாத்தி துண்டுகளை சேர்த்து, ஒரு கை தண்ணீர் தெளித்து, நன்கு கிளறி இறக்கவும்.
சுலபமான, சுவையான சில்லி பரோட்டா ரெடி.

Monday, 21 May 2012

ஆட்டுக்கல்ச்சுப்-பிள்ளை பெற்றவர்களுக்கும் ரொம்ப நல்லது, மூட்டு வலி உள்ளவர்களும் இதை குடிக்கலாம்.

வேக வைக்க
கால் - நாலு துண்டு
தக்காளி - - அரை பழம்
வெங்காயம் - ஒன்று
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
உப்பு சிறிது
சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
கொத்து மல்லி தழை -சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய் பவுடர் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க
***********
கரம் மசாலா துள் - ஒரு பின்ச்
நெய் - ஒரு தேக்கரண்டி
குக்கரில் காலை நன்கு தேய்ட்து கழுவி அதில் வேகவைக்க கொடுத்துள்ள மசாலாக்களை போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.
குக்கரில் விசில் வரும் போது தீயை குறைத்து கொள்ளவும்.
வெந்ததும் அதில் தேங்காய் பவுடரை கரைத்து ஊற்றி கொதிக்க விடு .
கொதித்து இரக்கியதும் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்
.
குறிப்பு
**********
சின்ன குழந்தைகளாக இருந்தால் அதை வடித்து தாளிக்கவும்.
பெரிய குழந்தைகள், கர்பிணி பெண்கள், பிள்ளை பெற்றவர்கலுக்கு என்றால் அப்படியே வெந்த்ததில் தாளித்து சேர்க்கலாம்
ஆட்டு கால் குழதைகள் எழுந்து நிற்கும் போது ஆட்டு எலும்பு, அல்லது காலில் சுப் போட்டு கொடுத்தால் நன்கு வலுவடையும்.
பிள்ளை பெற்றவர்களுக்கும் ரொம்ப நல்லது, மூட்டு வலி உள்ளவர்களும் இதை குடிக்கலாம்.

ருசியான வாளை மீன் வறுவல் ரெடி

தேவையான பொருட்கள்

வாளை மீன் - அரை கிலோ
எண்ணை - 100 மில்லி
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
மிளகு பவுடர் - அரை ஸ்பூன்
பூண்டு பல் தட்டிக்கொள்ள - 8 பல்.
கோதுமை மாவு - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 1டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்.
உப்பு - தேவைக்கு.
ரெட் கலர் - 1 பின்ச்
செய்முறை

மீனை கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள்,உப்பு போட்டு அலசி வைக்கவும்.
பின்பு மீனில் சில்லி பவுடர்,மிளகு பவுடர்,பூண்டு,உப்பு,ரெட் கலர்,தயிர்,அரிசி,கடலை,கோதுமை மாவு வகைகளை சேர்த்து பிசறி வைக்கவும்.
அரைமணி நேரம் கழித்து நன்றாக காய்ந்த எண்ணையில் மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும்.
ருசியான வாளை மீன் வறுவல் ரெடி.இதனை ஆனியன் ரிங்,கருவேப்பிலை போட்டு அலங்கரித்து பரிமாறலாம்.

குறிப்பு:

வாளை மீனில் முள் வாளை,பெல்ட் வாளை என்று உண்டு.பெல்ட் வாளை நடுமுள் மட்டும் இருக்கும்.வெள்ளை நிறமாக மெத்தென்று இருக்கும்.இதனை பயன்படுத்தினால் முள்பயம் இல்லாமல் சாப்பிடலாம்.

நட்ஸ் சப்பாத்தி (குழந்தைகளுக்கு) இது ருசியானது, சத்தானது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

1. கோதுமை மாவு - 2 கப்
2. பாதாம் - 10
3. முந்திரி - 20
4. நெய்
5. உப்பு

செய்முறை

பாதாம் நீரில் போட்டு ஊறவைத்து தோல் நீக்கவும்.
பாதாம் முந்திரியை மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும்.
இதை மாவு, உப்புடன் கலந்து நீர் சேர்த்து தேவைக்கு நெய் விட்டு சப்பாத்தி மாவாக பிசையவும்.
இதை சப்பாத்தியாக தேய்த்து, மேலே சிறிது நெய் தடவி, மாவு தூவி 4 ஆக மடித்து மீண்டும் தேய்த்து மெல்லிய சப்பாத்தியாக தேய்க்கவும்.
இதை நெய் விட்டு தோசை கல்லில் சுட்டு எடுக்கவும்.

இது ருசியானது, சத்தானது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

அடை (அ) கார தோசை, அரைத்த உடனே தோசை செய்யலாம்.

தேவையான பொருட்கள்

* அரைக்க:

* 1. இட்லி அரிசி - 4 கப்
* 2. துவரம் பருப்பு - 1 கப்
* 3. மிளகாய் வற்றல் - 10
* 4. பூண்டு - 5 பல்
* 5. உப்பு
* தாளிக்க:
* 1. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
* 2. உளுந்து + கடலை பருப்பு - 1 பெரிய குழிக்கரண்டி
* 3. வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* 4. கொத்தமல்லி, கருவேப்பிலை


செய்முறை

* அரிசி, பருப்பை இரவே ஊர வைக்கவும்.
* மிளகாய் வற்றல், உப்பு, பூண்டு சேர்த்து மிக்ஸியில் நன்றாக தோசை மாவு பதத்தில் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், உளுந்து, கடலை பருப்பு போட்டு சிவந்ததும், வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி, அரைத்த மாவில் கொட்டி கலக்கவும்.
* இதை வழக்கம்போல் தோசை வார்க்கவும்.


குறிப்பு:
இதற்கு தேங்காய் சட்னி, வெங்காய தக்காளி சட்னி பொருத்தமாக இருக்கும். காரம் அதிகமாக சேர்த்தால் எதுவும் இல்லாமல் வெறும் அடை தோசை சாப்பிட்டாலே சுவையாக இருக்கும். பூண்டு சேர்க்க விரும்பாதோர் பூண்டு இல்லாமலும் செய்யலாம். மாவு புளிக்க தேவையில்லை. அரைத்த உடனே தோசை செய்யலாம்.

கேரட் வடை வெந்து பொன்னிறமானதும் எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

தேவையானப் பொருட்கள்
துருவிய கேரட் - ஒரு கப்
* கடலை மாவு - 2 ஸ்பூன்
* மைதா - ஒரு ஸ்பூன்
* கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்
* இஞ்சி,பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
* பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2
* பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
* பொடியாக நறுக்கிய புதினா - 1/2 கப்
* பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1/2 கப்
* பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 1/4 கப்
* உப்பு - 1/2 ஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப
* எண்ணெய் - 1 1/2 கப் (பொரித்து எடுக்க)

கடலைப்பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து எடுத்து கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

step 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து கொள்ளவும்.

step 2
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறிய உருண்டையாக எடுத்து வடைகளாக தட்டி போடவும்.
step 3
வடை இருபுறமும் வெந்து பொன்னிறமானதும் எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Sunday, 20 May 2012

ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு!

உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.

உணவு உண்ணும் முறை:

உடலில் இயக்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.

துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.

துவர்ப்பு:

உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.

இனிப்பு:

மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.

புளிப்பு:

உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நாரத்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.

காரம்:

பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.

கசப்பு:

பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.

உவர்ப்பு:

அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.

உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக் கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.

இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசாயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.

ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது. கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.

எப்போதும் உணவ உண்ணும்போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது அழிவுக்கு வழி வகுக்கும்.

எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்ட பின்பு அப்படியே படுத்துக் கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப் படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது.

உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம். உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும்.

நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது. எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.

'உண்பது நாழி' என்று, உணவின் அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழ்க்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

சில சமயத்தில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் போது உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்.

வெங்காய சட்னி- இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

வெங்காய சட்னி

தேவையான பொருள்கள்:

வெங்காயம் - நான்கு
தக்காளி - மூன்று
காய்ந்த மிளகாய் - ஆறு
உப்பு - தேவையான அளவு
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன
புளி - கொஞ்சம
கறிவேப்பிலை - கொஞ்சம
பூண்டு - நான்கு பல்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

எண்ணெய் விட்டு காய்ந்ததும் முதலில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, போட்டு வறுத்து கொள்ள வேண்டும்.
பிறகு வெங்காயம், தக்காளி அனைத்தும் ஒன்றன் பின் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.

குறிப்பு:

தக்காளி அல்லது புளி இரண்டில் ஒன்றை சேர்த்து அரைக்கலாம்.

தேவைப்பட்டால் எண்ணெய் கடுகு, பொருங்காயம் சேர்த்து தாளித்து கொள்ளலாம்.

இவை இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

இந்த வெந்நீர் வைத்தியத்துல.. பல ஆச்சர்யமான சமாசாரங்கள் அடங்கியிருக்கு...

‘பாட்டி வைத்தியம்’ சொன்ன பாட்டியிடமிருந்து ‘வைத்திய’ ரிலே கட்டையை கைப்பற்றியிருக்கும் பாட்டியும், நல்ல அனுபவசாலி! ‘‘அலோபதியில எத்தனை மருந்து வந்தாலும், அவசரத்துக்கு நம்ம கை வைத்தியம் மாதிரி வரவே வராது’’ என்று அழுத்தமாக சொல்லும் அவரது எளிமையான குறிப்புகள் ஆரம்பமாகின்றன.

கிணறு வெட்ட பூதம் கிளம்புறாப்ல, சின்ன பிரச்னைக்கு கண்ட கண்ட இங்கிலீஷ் மருந்தைச் சாப்பிட்டு, அதனால புதுசு புதுசா வியாதிகளை வரவழைச்சுக்கக் கூடாது.

‘ஆயிரம் வியாதிக்கும் அடுப்பங்கரையில இருக்கு வைத்தியம்’னு பெரியவங்க சொல்றதுண்டு. யோசிச்சுப் பார்த்தா, எதனால பிரச்னையோ.. அதனாலயே அதைத் தீர்க்க முயற்சிக்கறதுதான் புத்திசாலித்தனம்னு புரிய வரும்.

சமையலறையில நாம எண்ணெயையும் நெய்யையும் கொட்டியோ, இல்ல.. ஒரேயடியா வறுத்துப் பொரிச்சோ செய்யற பண்டத்தாலதான் பல வியாதிகளும் நமக்கு வர்றது. ‘கிச்சன்’ல ‘வெட்டு வெட்டு’னு வெட்டிட்டு, வயித்து வலிக்கு டாக்டரைத் தேடி ஏன் ஓடணும்? இதுக்கான மருந்தும் கிச்சன்லயே இருக்கு. நம்ம இஞ்சி, சுக்கு, ஏலம், கிராம்பு, கீரை, கொத்துமல்லி விதை, அரிசி திப்பிலி, கண்ட திப்பிலி, பூண்டு.. இதுல எல்லாம்தான் இருக்கு சூட்சுமம்!

இதையெல்லாம் வெச்சு என்ன செஞ்சா.. என்னென்ன வியாதிகள்லாம் ஓடும்னுதான் உங்களுக்கு நான் சொல்றதா இருக்கேன்.

ஆச்சு.. மழைக்காலம் வந்துடுச்சு. சாதாரண நாள்லயே ஸ்வீட், எண்ணெய்ப் பலகாரம்.. எல்லாத்தையும் தொட்டுப் பார்க்கக்கூட இந்த டீன்&ஏஜ் குழந்தைகள் பயப்படும். ‘கொலஸ்ட் ரால்’ பயம், ஊளைச் சதை, இடுப்புல மடிப்பு, தொப்பை வேற.. ஜீன்ஸ் போட முடியாம.. என்ன கஷ்டம்டியம்மா!

விதவிதமா அகர்வாலையும், ஸ்ரீகிருஷ்ணாவையும், ஆனந்த பவனையும் படைச்சுப்புட்டு, இந்த மாதிரியான பயத்தையும் பகவான் படைச்சிருக்க வேண்டாம்னு தோணுது.. இல்லையா?!

இனிப்போ, எண்ணெய்ப் பல காரமோ.. அளவாச் சாப்பிட்டா பிரச்னையே இல்ல. கொஞ்சம் கூடுதலா சாப்பிட்டுட்டா, நாக்கு முழுக்க மைதா மாவைத் தடவின மாதிரி ‘வழவழ’னு ஆகிடும் சிலருக்கு.

உடம்பும் அங்கேயிங்கே சதை இல்லாம உருவி விட்டாப்ல இருக்கணும். அஜீரணம், ஏப்பம், நாக்கு கொழகொழப்பு இதெல் லாமும் வரக் கூடாதுன்னா, இதைப் படிங்க முதல்ல..

ஸ்வீட்டோ, காரமோ.. இல்ல, வடை பாயசத்தோட சாப்பாடோ.. சாப்பிட உக்கார்றதுக்கு முன்னால, நாக்கு பொறுக்கற சூட்டுல ஒரு டம்ளர் வெந்நீரைக் குடிச்சிருங்க குழந்தைகளா.. அதேமாதிரி, சாப் பிட்டதுக்கு அப்புறமாவும் ஒரு டம்ளர் வெந்நீர்.. அந்த வெந்நீர் ‘வெதவெத’னு இருக்கக் கூடாது. அதுக்காக நாக்கைச் சுட்டுக்கவும் கூடாது. நாக்கு பொறுக்கற சூடு.. ஞாபகம் வெச்சுக்கங்க!

இதுல.. அதாவது, இந்த வெந்நீர் வைத்தியத்துல.. பல ஆச்சர்யமான சமாசாரங்கள் அடங்கியிருக்கு...

1. சாப்பிடறதுக்கு முந்தி குடிக்கிற வெந்நீர், நம்ம வயிறு ஃபுல் ஆன மாதிரி ஒரு திருப்தியைக் கொடுக்கும். ஜாங்கிரி, முள்ளுத் தேங்குழல் இப்படி பேச்சு வாக்குல வளைச்சுக் கட்ட முடியாது. வடையோ, பாயசமோ கொஞ்சம் சாப்பிட்டாலும் ‘போதும்’னு சொல்ல வைக்கும்.

2. அது மட்டுமில்லாம, இந்த வெந்நீர் வைத்தியம் பண்றதால, நாக்கு கொழகொழப்பு, வாய் துர்நாற்றம், தொண்டை கரகரப்பு, முகத்துல வர்ற பரு, கரும்புள்ளிகள்.. எல்லாம் மறைஞ்சுடும். உள்ளே சுத்தமா இருந்தா, வெளியேயும் சுத்தமா இருக்கலாம்.

இதுக்காகத்தான் அந்தக் காலத்துல சுமங்கலி பிரார்த்தனை, திதி.. இது போன்ற சமயங்கள்ல, சாப்பாட்டு இலைக்குப் பக்கத்துல சுக்கைத் தட்டிப் போட்டு வெந்நீரை வச்சுடு வாங்க.

நாம தினமுமே இப்படி வெந்நீர் குடிக்கலாம். உடலையும் முகத்தை யும் நல்லா வெச்சுக்கலாம்.

இந்த பாட்டி எதைச் சொன்னாலும், உடனே ஃபாலோ பண்ற மாதிரிதான் இருக்கும். கவலையே வேண்டாம் கண்ணு களா. அத்தனைக்கும் மருந்து இருக்கு நம்ம கையிலயே..

வெஜிடபிள் சூப்

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைகோஸ், பட்டாணி - அரை கப், தண்ணீர் - மூன்று கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கோதுமை மாவு - ஒரு டீஸ்பூன் (சற்று குவித்து அளக்கவும்), மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், சர்க்கரை - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி (அ) வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி.

செய்முறை: தண்ணீரை கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்ததும் காய்கறிகளை சேர்த்து அரை வேக்காடு வேக விடவும். காய்கறிகள் பாதி அளவில் வெந்து கொண்டிருக்கும்போது இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, சர்க்கரை சேர்த்து வேக விடவும்.

காய்கறிகள் நன்றாக வெந்ததும், கோதுமை மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். தீயைக் குறைத்து கிளறவும். மீண்டும் 3 நிமிடம் கொதித்ததும் இறக்கி, மிளகுத்தூள், வெங்காயத்தாள் (அ) கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

இந்த காய்கறி சூப்பில் கிரீம் சேர்த்து செய்யாததால் உடல் எடை கூடாது. கலோரி குறைவு.வயிற்றுக்கும் நிறைவாக இருக்கும்.