Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Monday, 10 September 2012

நாவையும் சுண்டி இழுக்கும் இந்த ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி மாவு - 2 கப்
தேங்காய்ப்பால் (முதல் பால்) - 1 கப்
அடுத்ததாக எடுக்கும் தேங்காய்ப்பால் - தேவைக்கு
பால் - 3 கப்
சர்க்கரை - 2 1\2 கப்
ஏலக்காய் - 4
முந்திரி, திராட்சை - தேவைக்கு
நெய் - 5 டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை:

* பாலை நன்றாகக் காய்ச்சவும்.

* அரிசி மாவில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் தனியே எடுத்துவிட்டு மீதமுள்ள மாவில் காய்ச்சிய பாலை விட்டு, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும்.

* சிறிது உப்பு சேர்க்கவும்.

* பிசைந்த மாவைச் சிறுசிறு உருண்டைகளாக நீண்ட வடிவத்தில் பிடித்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு, இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப்பாலை ஊற்றி, சர்க்கரை கரைய வைத்து நீர்த்த பாகாக்கவும்.

* பிறகு எடுத்து வைத்த அரிசி மாவை சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும்.

* சிறிது கெட்டியாக பாயசம் போலவரும், இச்சமயம் ஆவியில் வேக வைத்ததைப் போட்டு கிளறிவிடவும்.

* பின்னர், பால், தேங்காய்ப்பால் - இரண்டையும் ஊற்றி ஒரு கொதி வந்ததும் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துப் போட்டு, ஏலக்காயைப் பொடி செய்து போட்டு இறக்கி வைக்கவும்.

* நெய்யையும் ஊற்றி மூடி வைக்கவும். சாப்பிட ருசியோ ருசி!

இதன் சிறப்பு:

* ஆவியில் வேக வைத்ததால் உடல்நலத்துக்கு உகந்தது.

* தேங்காய்ப்பால், பால் கலவையுடன் ஏலக்காய், நெய் வாசனை சேர்ந்து சாப்பிடத் தூண்டும்.

* பாயசங்களையே மாற்றி மாற்றி வைக்காமல் இப்பழமையான பால் கொழுக்கட்டை செய்தும் விருந்தினரை வியக்க வைக்கலாம்.

பாசிப்பருப்பு இட்லி

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 கப்
பச்சரிசி - 1/4 கப்
சர்க்கரை - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
ஏலப்பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
ஆப்பசோடா - 1 சிட்டிகை
நெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* பருப்பு, அரிசி இரண்டையும் தனித்தனியே ஊற வைத்து ஒரு மணி நேரம் கழித்து கரகரப்பாக அரைக்கவும்.

* அதனுடன் தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி, பாதி நெய், ஆப்ப சோடா சேர்த்து நன்றாகக் கலந்து இட்லி மாவு பதத்தில் நீரோ, பாலோ ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.

* நெய் தடவிய இட்லித்தட்டில் ஊற்றி ஆவியில் வேக வைக்கவும்.

* வெந்ததற்கு அடையாளமாக ஒரு கத்தியை நுழைத்தால் ஒட்டாமல் வரவேண்டும்.

* துண்டுகள் போட்டு சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Saturday, 8 September 2012

கொத்து இடியாப்பம்

தேவையான பொருட்கள்:

இடியாப்பம் (உதிரியானது) - 2 கப்
வேக வைத்த நாட்டுக் காய்கறிகள் (கத்திரிக்காய், முள்ளங்கி, கொத்தவரை, காராமணி, சேனைக்கிழங்கு) - தலா 50 கிராம்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 3 டேபிள் டீஸ்பூன்
சோம்புத் தூள் - 1\2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்த மல்லி - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 50 கிராம்
பொடியாக நறுக்கிய தக்காளி - 2
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

* கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கவும்.

* பிறகு தக்காளி, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

* சோம்புத்தூள் தவிர மற்ற எல்லா பொடிகளையும் சேர்த்து வதக்கவும்.

* காய்கறிகளை வேக வைத்த தண்­ணீருடன் சேர்க்கவும்.

* உப்பு சேர்த்து தண்­ணீர் வற்ற நன்கு வேக விடவும்.

* தண்ணீ­ரே தெரியாமல், எண்ணெய் கக்கும் அளவுக்கு வந்ததும், இடியாப்பம் சேர்த்துக் கிளறவும்.

* குறைந்த தணலில் வைத்து, ஒரு கைப்பிடி தண்ணீ­ர் தெளித்துக் கிளறவும் (இடியாப்பம் குளிர்ந்திருப்பதால் தண்ணீ­ர் தெளிக்க வேண்டும்).

* 3 நிமிடங்களுக்கு மூடி வைத்து, மறுபடி கிளறிவிட்டு, கடைசியாக சோம்புத் தூள் தூவிப் பரிமாறவும்.

* காய்கறிகளுக்கு பதில் காளான் மட்டுமே சேர்த்தும், இதே முறையில் கொத்து இடியாப்பம் செய்யலாம்.

முந்திரி மசால் தோசை

தேவையான பொருட்கள்:

தோசைக்கு:

தோசைமாவு - 2 கப்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்

மசாலாவுக்கு:

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
கேரட் - 1
பட்டாணி - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
தக்காளி - 2
முந்திரி - 10
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 டீ ஸ்பூன்
உளுந்து - 2 டீ ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து, மசியுங்கள்.

* கேரட், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள்.

* எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, முந்திரி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள்.

* பின்னர் கேரட், பட்டாணி சேர்த்து நன்கு வதக்குங்கள்.

* அத்துடன், மசித்த உருளைக்கிழங்கு, தேவையான உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்குங்கள்.

* கடைசியில் கடலை மாவை, சிறிது தண்­ணீரில் கெட்டியாகக் கரைத்து, மசாலாவோடு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

* தோசைக்கல்லை காயவைத்து, ஒரு கரண்டி மாவை எடுத்து, மெல்லிய தோசையாக ஊற்றுங்கள்.

* எண்ணெய், நெய்யைக் கலந்துகொண்டு, தோசையைச் சுற்றிலும் சிறிது ஊற்றுங்கள்.

* நடுவில் சிறிது மசாலாவை பரவினாற்போல வைத்து, தோசையை மடித்து வெந்ததும் எடுங்கள்.

* ஒவ்வொரு தோசை ஊற்றும் முன்பும் சிறிது தண்­ர் தெளித்து, கல்லைத் துடைத்துவிட்டு ஊற்றினால், தோசை பொன்னிறமாக வரும்.

எலுமிச்சை ரசம்

தேவையான பொருட்கள்:

ரசப் பொடி - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
துவரம் பருப்பு - 100 கிராம்
எலுமிச்சம்பழம் - 2
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தாளிப்பதற்கு
கறிவேப்பிலை - 1 தழை
கடுகு - 1 டீஸ்பூன்

செய்முறை:

* 1 டீஸ்பூன் உப்பு, 1 சிட்டிகை பெருங்காயம் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் (நீள்வாக்கில் நறுக்கவும்) இரண்டு கப் தண்­ர் சேர்த்து, கொதிக்க விடவும்.

* 1 கப் வேகவைத்த துவரம் பருப்பை போட்டு பொருட்கள் முழுவதும் பச்சை வாடை போகும் வரை வேக வைக்கவும்.

* ரசப்பொடியை சேர்த்து இரண்டு நிமிடத்திற்கு சூடு செய்யவும்.

* கடுகு மற்றும் கறிவேப்பிலையை தாளித்து அதில் சேர்க்கவும்.

* அதனை இறக்கி, 2 எலுமிச்சம் பழத்தைப் பிழித்து நன்றாகக் கலக்கவும். பருப்பு வேகவைத்த நீரையும் சேர்க்கவும்.

குறிப்பு: சமைத்து முடிக்கும் வரை ரசத்தை கலக்கக் கூடாது.

மஷ்ரூம் பிரியாணி

தேவையான பொருட்கள்:

மஷ்ரூம் எனப்படும் காளான் நல்ல வெள்ளையாக உள்ளது - 200 கிராம்
பாசுமதி அரிசி - 200 கிராம்
முந்திரிப்பருப்பு - 10
பிஸ்தா பருப்பு - 10
குடமிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்).
இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
அஜினமோட்டா - 1 சிறிய பாக்கெட்
தேங்காய்ப்பால் - 100 மி.லி.,
நெய் - 25 மி.லி.,
மல்லித்தழை நறுக்கியது - 1 கப்
மிளகுத்தூள் - 1 டீ ஸ்பூன்
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* பாசுமதி அரிசி ஒரு மடங்குக்கு தேங்காய்ப்பால் + தண்­ணீர் சேர்த்து இருபங்கு விட்டு குக்கரில் இரண்டு விசில் வரவிட்டு இறக்கவும்.

* வாணலியில் நெய்விட்டு வெங்காயம், குடமிளகாய், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், உப்பு, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
* சாதத்துடன் வதக்கியதைப் போட்டு வதக்கவும்.

* சாதத்துடன் வதக்கியதைப் போட்டு அஜினமோட்டா, சோயாசாஸ், மிளகுத்தூள் சேர்க்கவும். நெய்யில் முந்திரி, பிஸ்தா வறுத்துப் போடவும்.

* மஷ்ரூமை நான்கு துண்டுகளாக நறுக்கி இளம்சூடான தண்ணீ­ரில் உப்பு போட்டு ஐந்து நிமிடம் வைத்து தண்­ணீர் வடித்து எடுக்கவும்.

* இதனை நெய்விட்டு வதக்கி சாதத்துடன் கலக்கவும். காளானில் புரதச்சத்து நிறைய உள்ளது.

ஓட்ஸ் பகலாபாத்

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 100 கிராம்
தயிர் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 5
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி - 1/2 கிராம்
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கிய பிறகு இஞ்சியையும் பெருங்காயத்தூளையும் மிக்ஸ் பண்ணிக் கொள்ள வேண்டும்.

* இதில் தயிரைக் கலந்து உப்பையும் மிக்ஸ் பண்ணிவிட வேண்டும்.

* ஐந்து நிமிடம் கழித்து ஓட்ஸை மிக்ஸ் பண்ணிவிட்டால் ஓட்ஸ் பகாலாபாத் ரெடி.

தூத் மக்கன்வாலா

தேவையான பொருட்கள்:

பனீர் - 1\4 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1\2 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
காய்ந்த வெந்தய இலை - 1\4 டீஸ்பூன்
கருப்பு உப்பு - 1\4 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
வெண்ணெய் - 50 கிராம்
பாலாடை - 4 டீஸ்பூன்

செய்முறை:

* பனீரை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரைத்து, வெண்ணெயில் ஒவ்வொன்றாக வதக்கவும்.

* இஞ்சி, பூண்டு விழுதும் சேர்த்து வதக்கவும்.

* மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியாதூள் சேர்த்து வதக்கவும்.

* வெந்தய இலை, தயிர் சேர்க்கவும்.

* ஓரளவு கொதித்ததும் பனீர் துண்டுகள் சேர்க்கவும்.

* விருப்பப்பட்டால் சிகப்பு கலர் சேர்க்கலாம்.

* நன்றாகக் கொதித்ததும், பாலாடை சேர்த்து, பச்சை வெங்காயம், தக்காளி மற்றும் எலுமிச்சை பழ வில்லைகளுடன் பரிமாறவும்.

என்ன இருக்கு?

பன்னீரில் புரோட்டீன், வைட்டமின் நிறைய உண்டு. கொலஸ்ட்ரால் கிடையாது. தயிரிலும், வெண்ணெயிலும் கொழுப்பும், கால்சியமும் உண்டு.

சுறா மீன் புட்டு

தேவையான பொருட்கள்:

சுறா மீன் துண்டு - 300 கிராம்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 3 அல்லது 4
பூண்டு (பொடியாக நறுக்கியது) - 6 பல்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
மல்லித் தழை - சிறிது
முழு உளுந்து - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1/2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* சுறா மீன் துண்டுகளை சூடான நீரில் போட்டு 10-15 நிமிடங்கள் வேக வைக்கவும்.

* அதனுடன் மஞ்சள் சேர்க்கவும்.

* மீன் துண்டுகள் வெள்ளை நிறத்தில் மாறிவிட்டால் அது வெந்து விட்டது என்று அர்த்தம்.

* மீன் துண்டுகளை தனியாக எடுத்து பரலாக(அதாவது) உதிரியாக உதிர்த்து வைக்கவும்.

* கடாயை சூடாக்கவும்.

* அதில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பின்பு முழு உளுந்து மற்றும் சீரகம் சேர்த்து வறுக்கவும்.

* அதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

* நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதனுடன் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

* உதிர்த்து வைத்துள்ள சுறா மீனை அத்துடன் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறவும்.

* உப்பு சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.

* நறுக்கி வைத்துள்ள மல்லித் தழை சேர்த்து பரிமாறவும்.

உளுத்தம்பருப்பு ஸ்வீட் கட்லெட்

தேவையான பொருட்கள்:

உளுத்தம்பருப்பு - 1/2 கப்
நாட்டுச்சர்க்கரை - 3/4 கப்
நெய் - 1/4 கப்
ஏலக்காய் - தேவையான அளவு

செய்முறை:

* உளுத்தப்பருப்பை, வெறும் வாணலியில் போட்டு, பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.

* மிக்ஸியில் போட்டு, ரொம்பவும் நைஸாக இல்லாமல் அரைக்கவும்.

* சர்க்கரை, ஏலக்காய் இரண்டையும் பொடி செய்யவும்.

* அரைத்த உளுத்த மாவு, சர்க்கரை, ஏலக்காய் மூன்றையும் கலந்துகொள்ளவும்.

* அந்த மாவை, ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் விருப்பமான வடிவத்தில் கட்லெட் போல தட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

* அடுப்பை 'ஸிம்'மில் வைத்து, தோசைக்கல்லை காயவைத்து, தட்டிய கட்லெட்டுகளை போட்டு, சுற்றிலும் நெய்விட்டு, லேசாகப் பொரிந்ததும் உடனே எடுத்துவிட வேண்டும்.

* பொரித்தெடுத்த கட்லெட் மீது விருப்பப்பட்டால் துருவிய முந்திரி, பாதாம், பிஸ்தா தூவி சுடச்சுட பரிமாறலாம்.

* இந்த கட்லெட்டை 3 முதல் 4 நாட்கள் வரை காற்றுப் புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தியும் பயன்படுத்தலாம்.

பயன்கள்:

'உளுத்துப் போன உடம்புக்கு, உளுந்து' எனப் பெரியோர்கள் கூறியிருக்கின்றனர். இடுப்பு வலுப்பெற உளுந்து மிகச் சிறந்த உணவு. உடல் வலிமை பெற்றுத் திகழும்

Friday, 7 September 2012

வெத்தலை-பூண்டு சாதம்

தேவையான பொருட்கள்:

வெற்றிலை - 3
சீரக சம்பா அரிசி - 1/4 கிலோ
பூண்டு - 5 பல்
சோம்பு - 1/2 டீ ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
ஸ்பெஷல் மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

ஸ்பெஷல் மசாலாவுக்கு:

கருப்பு எள் - 1 டீ ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சுக்குப் பொடி - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 5
விரலி மஞ்சள் - அரை இன்ச்
உப்பு - தேவைக்கேற்ப

எல்லாவற்றையும் எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.

செய்முறை:

* அரிசியை உதிரியாக வேக வைத்துக் கொள்ளவும்.

* கடாயில் நெய் விட்டு, பட்டை, சோம்பு வறுக்கவும்.

* பூண்டு சேர்க்கவும்.

* வெற்றிலையை நறுக்கிச் சேர்க்கவும்.

* ஸ்பெஷல் மசாலா பொடியும் உப்பும் சேர்த்து, தண்­ணீர் தெளித்து வதக்கவும்.

* வடித்த சாதம் சேர்த்துக் கிளறி, தீயைக் குறைத்து ஒரு கை தண்­ணீர் தெளித்துக் கலந்து, மூடி வைக்கவும்.

* 3 நிமிடங்கள் கழித்துக் கிளறி இறக்கவும்.

பால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி மாவு - 2 கப்
தேங்காய்ப்பால் (முதல் பால்) - 1 கப்
அடுத்ததாக எடுக்கும் தேங்காய்ப்பால் - தேவைக்கு
பால் - 3 கப்
சர்க்கரை - 2 1\2 கப்
ஏலக்காய் - 4
முந்திரி, திராட்சை - தேவைக்கு
நெய் - 5 டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை:

* பாலை நன்றாகக் காய்ச்சவும்.

* அரிசி மாவில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் தனியே எடுத்துவிட்டு மீதமுள்ள மாவில் காய்ச்சிய பாலை விட்டு, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும்.

* சிறிது உப்பு சேர்க்கவும்.

* பிசைந்த மாவைச் சிறுசிறு உருண்டைகளாக நீண்ட வடிவத்தில் பிடித்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு, இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப்பாலை ஊற்றி, சர்க்கரை கரைய வைத்து நீர்த்த பாகாக்கவும்.

* பிறகு எடுத்து வைத்த அரிசி மாவை சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும்.

* சிறிது கெட்டியாக பாயசம் போலவரும், இச்சமயம் ஆவியில் வேக வைத்ததைப் போட்டு கிளறிவிடவும்.

* பின்னர், பால், தேங்காய்ப்பால் - இரண்டையும் ஊற்றி ஒரு கொதி வந்ததும் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துப் போட்டு, ஏலக்காயைப் பொடி செய்து போட்டு இறக்கி வைக்கவும்.

* நெய்யையும் ஊற்றி மூடி வைக்கவும். சாப்பிட ருசியோ ருசி!

இதன் சிறப்பு:

* ஆவியில் வேக வைத்ததால் உடல்நலத்துக்கு உகந்தது.

* தேங்காய்ப்பால், பால் கலவையுடன் ஏலக்காய், நெய் வாசனை சேர்ந்து சாப்பிடத் தூண்டும்.

* பாயசங்களையே மாற்றி மாற்றி வைக்காமல் இப்பழமையான பால் கொழுக்கட்டை செய்தும் விருந்தினரை வியக்க வைக்கலாம்.

லட்டு

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கிலோ
சர்க்கரை - 1-1/4 கிலோ
முந்திரி - 15
விதையில்லா திராட்சை - 10
சோடா - 1 சிட்டிகை
கற்கண்டு - 10 கிராம்
பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
எண்ணெய் - வறுப்பதற்கு
குங்குமப்பூ - 1 சிட்டிகை
ஏலக்காய் - 5

செய்முறை:

* மாவு, சோடா, நீர் சேர்த்து மாவு போல் கரைத்து சூடான எண்ணெயில் ஜார்னியின் மூலமாக விழ வைத்து வறுத்து எடுத்து பூந்தி செய்யவும்.

* 1:1 சர்க்கரை மற்றும் நீர் சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்க வைத்து சர்க்கரை சிரப் செய்யவும்.

* இந்த சிரப்பில் ஒரு சிட்டிகை கேசரிப்பவுடர் சேர்க்கவும்.

* பூந்திகளை அந்த சர்க்கரை சிரப்பில் போட்டு நன்கு கலக்கவும்.

* முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து இந்த கலவையில் சேர்க்கவும்.

* ஏலக்காய் பவுடர் விதையில்லா திராட்சை சேர்த்து நன்கு கலக்கவும்.

* இந்த கலவையானது கையில் பிடிக்கும் அளவிற்கு சூடு குறைந்து விடும். இப்பொழுது சீரான உருண்டைகளாக கையில் இலேசாக அழுத்தி பிடிக்கவும். ஆற விடவும்.

குறிப்பு:

சர்க்கரை சிரப் சூடாக இருக்கும் போது சிரப்பில் பூந்தியை சேர்க்கவும்.

மைசூர் பாக்

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 100 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
தண்ணீ­ர் - 75 கிராம்
நெய் - 100 கிராம்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை

செய்முறை:

* கடலைமாவு, சர்க்கரை மற்றும் நீர் சேர்த்து மிருதுவாக கலக்கவும். இதை வாணலியில் ஊற்றி சிறுதீயில் சமைக்கவும்.

* மற்றொரு பாத்திரத்தில் நெய்யை சிறு தீயில் வைக்கவும். சிறிது சிறிதாக சூடான நெய்யை கடலை மாவு கலவையில் சேர்த்து விடாமல் கிளறவும். அது பக்கங்களில் ஒட்டாமல் வரும் வரை இவ்வாறு செய்யவும். சோடா மாவு சேர்த்துக் கிளறவும்.

* ஒரு ட்ரேயில் உட்பகுதியில் நெய்யை தடவி சமைத்த கலவையை அதில் ஊற்றவும்.

* அது சூடாக இருக்கும்போது அதன் மேற்பகுதியில் இணைகோடுகள் வரைந்து துண்டுகளாக வெட்டவும்.

* கடலை மாவு தீய்ந்து போகாமல் இருப்பதற்கு சமைக்கும்போது மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எள்ளுருண்டை

தேவையான பொருட்கள்:

வெள்ளை எள்ளு விதை - 200 கிராம்
வெல்லம் - 100 கிராம்

செய்முறை:

* வாணலியில் எள்ளை போட்டு அது வெடிப்பதற்கு ஆரம்பிக்கும் வரை வறுக்கவும்.

* வேறொரு பாத்திரத்தில் வெல்லப்பாகு செய்யவும்.

* பாகானது போதுமான அளவிற்கு வரும்வரை சூடு செய்யவும்.

* கெட்டியான அளவிற்கு ஒரு துளி பாகை நீரில் போட்டால் உடனே கெட்டியாக வரவேண்டும்.

* இந்த நிலைக்கு வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி இதனை எள்ளுடன் சேர்க்கவும்.

* கையால் தாங்குமளவிற்கு சூடு ஆறிய பிறகு கையில் அரிசி மாவையோ (அ) நெய்யையோ தடவவும். கைகளைப் பயன்படுத்தி எள்ளை சீரான சிறு உருண்டைகளாக செய்யவும்.

குறிப்பு:

எள்ளுருண்டைகள் கெட்டியாக உருவாவதற்கு பாகை 2- கம்பி சீரான பதத்திற்கு தயாரிக்கவும்.

ரவா லட்டு

தேவையான பொருட்கள்:

வெள்ளை ரவை - 1 கிலோ
சர்க்கரை - 1-1/2 கிலோ
ஏலக்காய் - 10 (பொடித்தது)
நெய் - 200 கிராம்
முந்திரி - 50 கிராம்

செய்முறை:

* உலர்ந்த வாணலியில் ரவையை வறுத்து பொடி செய்யவும்.

* நன்றாக பொடி செய்த சர்க்கரை ஏலக்காய்ப் பொடி சேர்க்கவும்.

* முந்திரியை நெய்யில் வறுத்து இந்தக் கலவையில் சேர்க்கவும்.

* நெய்யை உருகுமளவிற்கு இலேசாக சூடு செய்து அதனுடன் கலந்து நன்கு கலக்கவும்.

* இந்த மாவை சீரான அளவு உருண்டைகளாக உருட்டவும்.

* இந்த இனிப்பு வகையுடன் பால் சேர்க்கலாம். ஆனால் லட்டை சீக்கிரமாக பயன்படுத்திவிட வேண்டும்.

காஷ்மீரி ஆலு தம்

தேவையான பொருட்கள்:

ஒரே அளவான சிறு வகை உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
உறைந்த ஆடையுடன் கட்டித் தயிர் - 1/2 லிட்டர்

மசாலா செய்ய:

(இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
கஸீரி மேதி - 2 ஸ்பூன்
சிவந்த மிளகாய் - 4
நெய் - 3 ஸ்பூன்
தக்காளி ஜூஸ் - கெட்டியாக ஒரு கிண்ணம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* உருளைக்கிழங்கை வேக வைத்து உரிக்கவும்.

* டூத்பிக்கினால் கிழங்கு ஒவ்வொன்றையும் குத்திவிடவும்.

* வாணலியில் 3 ஸ்பூன் நெய்விட்டு உருளைக்-கிழங்குகளைப் போட்டு பொன்னிறமாக ரோஸ்ட் செய்யவும்.

* இஞ்சி முதல் மிளகாய் வரையுள்ள சாமான்களை வெண்ணெய் போல அரைத்து, உப்பு சேர்த்து ரோஸ்ட் ஆகிக் கொண்டிருக்கும் உருளைக் கிழங்குடன் போடவும்.

* இரண்டும் சேர்ந்து பொன்னிறமானதும், தயிர் முழுவதையும் கடைந்து ஊற்றவும்.

* தயிர் கொதித்து வற்ற ஆரம்பித்ததும் தக்காளி ஜூஸைச் சேர்த்து கொதிக்க விடவும்.

* குழம்புப் பதமாக வந்தவுடன் இறக்கவும்.

புரோகோலி கூட்டு

தேவையான பொருட்கள்:

புரோகோலி - 1/4 கிலோ
முழு பூண்டு - 1
வெங்காயம் - 1/4 (சிறிய துண்டு)
எண்ணெய் - 2 அல்லது 3 ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்
தண்­ணீர் - 1/4 கப்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்

செய்முறை:

* புரோகோலியை அதன் தண்டு உட்பட (அரை இன்ச் அளவில்) நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

* பூண்டு பற்களை வட்ட வடிவில், சற்றுத் தடிமனாக நறுக்கிக் கொள்ளவும்.

* வெங்காயத்தையும் நறுக்கி வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய்விட்டு அதில் நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை லேசாக வதக்கி, பிறகு நறுக்கிய புரோகோலியையும் அத்துடன் சேர்த்து வதக்கவும்.

* புரோகோலியின் பச்சை நிறம் மாறாத அளவுக்கு மட்டும் வதக்கிய பிறகு உப்பு, தண்ணீ­ர் சேர்த்து மூடி போடாமல் வேகவைக்கவும்.

* வெந்த பிறகு மிளகுத்தூள் தூவி இறக்கவும்.

Wednesday, 5 September 2012

மட்டன் சேமியா

தேவையான பொருட்கள்:

சேமியா - 1 பாக்கெட்
மட்டன்(கொத்தியது) - 150 கிராம்
தக்காளி - 2 (சிறியது)
புதினா - 7, 8 இலைகள்
கொத்தமல்லிதழை - சிறிதளவு
இஞ்சி - 1/2 டீ ஸ்பூன்
பூண்டு - 1/2 டீ ஸ்பூன்
தனியா தூள் - 1 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
கேசரி பவுடர் - சிறிதளவு
நெய் - 50 கிராம்
எண்ணெய் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 1
கரம் மசாலா பவுடர் (அ) சிக்கன் மசாலா - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும்.

* தக்காளியையும் நறுக்கி வைக்கவும்.

* புதினா கொத்தமல்லித்தழையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

* கறியை தண்­ணீரில் சுத்தம் செய்து வைக்கவும்.

* கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

* பின் வெங்காயம் சேர்த்து சிவக்க தாளிக்கவும்.

* பிறகு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

* பச்சை வாசனை போனவுடன் கறி, தனியாதூள், மிளகாய் தூள், கேசரி பவுடர், கரம் மசாலா பவுடர் போட்டு வதக்கவும்.

* 2 கிளாஸ் தண்ணீ­ர் ஊற்றி கொதிக்கவிடவும். உப்பு சேர்க்கவும். மேலும் 1 கிளாஸ் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம். ஏனென்றால் ஒவ்வொரு சேமியா சீக்கிரம் வெந்துவிடும் ஆனால் சில சேமியாவிற்கு நிறைய தண்­ணீர் தேவைப்படும்.

* தண்ணீ­ர் வற்றியதும் மூடி போட்டு மேலே கனமான சாமான் வைத்து சிம்மில் வைக்கவும். 5 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

சிக்கன் மக்ரோனி

தேவையான பொருட்கள்:

மக்ரோனி - 150 கிராம்
எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சைமிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 3 டீ ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீ ஸ்பூன்
பட்டை, ஏலக்காய், கிராம்பு(வாசனைத்தூள்) - 1/2 டீ ஸ்பூன்
சிக்கன் மசாலா தூள் - 1 டீ ஸ்பூன்
தனியா தூள் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
நெய் - 4 டீ ஸ்பூன்

செய்முறை:

* மக்ரோனியை உப்பு சேர்த்து அவித்து தண்­ணீர் வடித்துக்கொள்ளவும்.

* வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, பிரிஞ்சி சேர்க்கவும்.

* பின்னர் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

* பின் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக கிளறவும்.

* அதில் தக்காளி, பின்னர் எல்லாத்தூள்களையும் தயிர் சேர்த்து வதக்கவும்.

* எண்ணெய் மேலே வந்ததும் சிக்கனை சேர்த்து நன்கு வேகவிடவும்.

* சிக்கன் வெந்ததும் வேக வைத்த மக்ரோனியை சேர்த்து மசாலாவில் உள்ள நீர் வற்ற கிளறி பின் இறக்கவும்.

குறிப்பு:

* மக்ரோனியில் உப்பு சேர்த்திருப்பதால் சிக்கனில் தேவைக்கு மட்டும் சேர்க்கவும். விருப்பப்பட்டால் பொடிதாக நறுக்கிய வெங்காயத் தாள் சேர்த்து பரிமாறலாம்.

* மட்டனுக்கும் இதே செய்முறை தான். ஆனால் குக்கரில் மட்டனை அவிக்க வேண்டும். விருப்பப்பட்டால் புதினா, கொத்தமல்லி சேர்க்கலாம்.

பால் சுண்டைக்காய் பாயசம்

தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்த பால் சுண்டைக்காய் - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
திக்கான வெல்லக் கரைசல் - 1 கப்
திக்கான முதல் தேங்காய்ப் பால் - 1 கப்
முந்திரி - 10
திராட்சை - 20
நெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து, கழுவி, குழைய வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

* பால் சுண்டைக்காயை சுத்தம் செய்து, இடித்து கொஞ்சமாக தண்­ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்து, மிக்சியில் இட்டு அரைத்து, வடிகட்டி சாறை எடுத்துக் கொள்ளவும்.

* அடி கனமான பாத்திரத்தில் வெல்லக்கரைசலை எடுத்துக் காய்ச்சி இறுகும் நிலையில் சுண்டைக்காய் சாறு, பருப்பு மசியல், சேர்த்துக் கிளறி, இறக்கும் தறுவாயில் தேங்காய்ப் பால் சேர்த்து, நெய்யில் சிவக்க வறுத்து வைத்த முந்திரி திராட்சையைச் சேர்த்துக் கலக்கி சுவைக்கவும்.

* கசப்பு என்பதே இல்லாத ஆச்சரியமான ஆரோக்கிய பாயசம் இது.

Tuesday, 4 September 2012

மட்டன் பக்கோடா

தேவையான பொருட்கள்:

மட்டன் - 7 (அ) 8 சின்ன துண்டுகள்
வெங்காயம் - 1/2
இஞ்சி, பூண்டு - 1/2 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
ரெடிமேட் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

* குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு தாளிக்கவும்.

* பிறகு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி மட்டன், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, 1 டம்ளர் தண்­ணீர் சேர்த்து 5 விசில் வரை வேக விடவும்.

* கறி வெந்தவுடன் தண்­ணீரை வடிகட்டி தனியே வைத்துக்கொள்ளவும்.

* பிறகு மட்டன் கலவையில் பஜ்ஜி போண்டா மிக்ஸ் கொஞ்சம் சேர்த்து பிசறிக்கொள்ளவும். தேவையென்றால் மட்டன் வேகவைத்த தண்­ணீரை சேர்த்துக்கொள்ளலாம்.

* மட்டன் கலவை நன்கு கறியுடன் சேர்ந்து இருக்கவேண்டும்.

* பொரிப்பதற்கு எண்ணெயை காயவைத்து பொரித்து எடுக்கவும்.

* சுவையான மட்டன் பக்கோடா ரெடி.

இதே மாதிரி சிக்கன் பக்கோடாவும் செய்யலாம். எலும்புடன் அல்லது எலும்பில்லாமல், சிறு சிறு துண்டுகளாக வேக வைத்துக்கொள்ளவும்.

ஆனியன் சிக்கன் வறுவல்

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/4 கிலோ
வெங்காயம் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் - 2 டீ ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:

* சிக்கனை நன்கு சுத்தம் செய்து விட்டு சிறு சிறுத் துண்டுகளாக்கி கொள்ளவும்.

* மற்ற பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.

* வெங்காயத்தை எட்டாக நறுக்கி அதை தனித் தனியே பிரித்து வைத்துக் கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும்.

* பின்பு மசாலாத் தூள்களை சேர்த்து சிறிது நேரம் வதக்கி உடனே சிக்கன் துண்டுகளையும் சேர்த்து வதக்கவும்.

* பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்­ணீர் ஊற்றி மூடி போட்டு மிதமான தீயிலேயே பத்து நிமிடம் வேக விடவும்.(இடையில் இருமுறை கிளறி கொள்ளவும்.)

* சிக்கன் வெந்ததும், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து பிரட்டி இரண்டு நிமிடத்தில் மல்லித்தழை தூவி இறக்கி விடவும்.

* இதை சாம்பார், தயிர் சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். இதனுடன் குடைமிளகாயையும் வெங்காயம் போல் நறுக்கி சேர்க்கலாம். இன்னும் நல்ல சுவையுடன் இருக்கும்.

பட்டன் தட்டை

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி - 2 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப் (பொட்டுக்கடலை நமுத்திருந்தால், லேசாக வறுத்து அரைக்கவேண்டும்)
பாசிப்பருப்பு மாவு - 1 டேபிள் ஸ்பூன் (வறுத்து அரைத்தது)
பச்சை மிளகாய் - 8
பெருங்காயம் - சிறிது
நன்கு புளித்த தயிர் - 1/4 கப் (அ) எலுமிச்சம் பழச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - 1 டீ ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
தேங்காய் துருவல் - 1/2 கப்

செய்முறை:

* புழுங்கலரிசியை நன்கு கழுவி, ஒரு மணி நேரம் ஊறவையுங்கள்.

* பின்னர் அதனுடன் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயம், தயிர், உப்பு சேர்த்து, நைஸாக (கெட்டியாக) அரைத்துக்கொள்ளுங்கள்.

* அதில் பொட்டுக்கடலை மாவு, பாசிப்பருப்பு மாவு சேர்த்து, நன்கு கெட்டியாகப் பிசையுங்கள்.

* அந்த மாவிலிருந்து சுண்டைக்காயளவு உருண்டைகள் எடுத்து, சிறு சிறு தட்டைகளாகத் தட்டிக்கொள்ளுங்கள்.

* மிதமான தீயில் எண்ணெயைக் காயவைத்து, தட்டைகளைப் பொரித்தெடுங்கள்.

* கொறிக்க வித்தியாசமான, சத்தான ஸ்நாக்ஸ்.

கத்தரிக்காய் சட்னி

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 2
தயிர் - 2 கப்
வெங்காயம் - 3
சர்க்கரை - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1/2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - 3
தனியா - 1/2 கப்
எண்ணெய் - 100 மி.லி
உப்பு - தேவைக்கேற்ப
துருவிய தேங்காய் - 1 கப்
பச்சை மிளகாய் - 3 அரைத்தது
இஞ்சி - 2

செய்முறை:

* கத்தரிக்காய் மேல் சிறிது எண்ணெய் பூசி சுடவும்.

* மேல் காம்பு, தோல் இவற்றை நீக்கவும். சுத்தம் செய்து மசித்து கொள்ளவும்.

* இப்பொழுது தயிர், வெங்காயம் அரைத்த தேங்காய் விழுது, மிளகாய், சர்க்கரை தேவையான அளவு உப்பும் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.

* இரண்டு டீ ஸ்பூன் எண்ணெயை சூடு செய்து கறிவேப்பிலை, கடுகு போட்டு பொரிந்தவுடன் எண்ணெயை மசித்த கத்தரிக்காயில் ஊற்றவும். கலந்து குளிரச் செய்யவும்.

* கொத்தமல்லியுடன் அலங்கரித்து குளிர்ச்சியாக ஆன பிறகு பரிமாறவும். ஊற்றவும். சிறுதீயில் வைக்கவும். சொத்தமல்லியை தூவி பராத்தாவுடன் பரிமாறவும்.

* ஹைதராபாத்திலிருந்து அறிமுகமான இந்த உணவை பிரியாணியுடன் பரிமாறலாம்.

குறிப்பு:

கத்தரிக்காய்க்குப் பதிலாக வேறு வகையான பெரிய மிளகாய்களை வறுத்து பயன்படுத்தி மிர்சி காசாலன் செய்யலாம்.

சிக்கன் காலிஃப்ளவர் மசாலாக்கறி!


தேவையான பொருட்கள்:

வாத்துகறி - 1 கிலோ
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 2
நீளவாக்கில் அரிந்த தக்காளி - 2
கீறிய பச்சை மிளகாய் - 10
மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
முழுப்பூண்டு - 2
பிரியாணி இலை - 4
புளிக்கரைசல் - 2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு

அரைக்க:

தேங்காய்த்துருவல் - 1/4 கப்
வடகம் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

* வாத்தை மஞ்சள்தூள் சேர்த்து சுத்தம் செய்யவும்.

* புளிக்கரைசலில் உரித்த முழுப்பூண்டு பற்கள், மஞ்சள்தூள் சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு வடகத்தைப் பொரித்து தனியாக வைத்து, அதே எண்ணெயில் தேங்காயையும் பொன்னிறமாக வறுக்கவும்.

* வடகம்-தேங்காய் மைய அரைத்து கடைசியாக சீரகம் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

* பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பிரியாணி இலையைப் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகுத்தூள் என ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.

* வதங்கியதும் புளிக்கரைசலோடு இருக்கும் கறியை ஊற்றி கொதிக்கவிடவும்.

* கறி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

* இந்த குழம்பு புளிப்பாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். அதனால் புளிப்புக்கேத்த மாதிரி புளியை ஊறவைக்கவும்.

இஞ்சி பொங்கல்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 டம்ளர்
பாசிப் பருப்பு - 1 டம்ளர்
இஞ்சி துருவியது - 1 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி - 2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - 100 கிராம்
எண்ணெய் - 1 கப்
முந்திரி - 50 கிராம்

செய்முறை:

* குக்கரில் பச்சரிசி, பாசிப்பருப்பு, துருவிய இஞ்சி, பெருங்காயத் தூள், உப்பு, தண்ணீ­ர் 5 டம்ளர் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவேண்டும்.

* வாணலியில் நெய், எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், முந்திரி மற்றும் மிளகு சீரகப் பொடி போட்டு வறுத்தெடுத்து கறிவேப்பிலையை கடைசியாகச் சேர்க்கவும்.

* பத்தே நிமிடத்தில் இஞ்சி பொங்கல் ரெடி.

* இதைச் சுடச்சுட பறிமாற நாவில் நீர் சுரக்கும்.

Monday, 27 August 2012

மட்டன் பக்கோடா

தேவையான பொருட்கள்:

மட்டன் - 7 (அ) 8 சின்ன துண்டுகள்
வெங்காயம் - 1/2
இஞ்சி, பூண்டு - 1/2 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
ரெடிமேட் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

* குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு தாளிக்கவும்.

* பிறகு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி மட்டன், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, 1 டம்ளர் தண்­ணீர் சேர்த்து 5 விசில் வரை வேக விடவும்.

* கறி வெந்தவுடன் தண்­ணீரை வடிகட்டி தனியே வைத்துக்கொள்ளவும்.

* பிறகு மட்டன் கலவையில் பஜ்ஜி போண்டா மிக்ஸ் கொஞ்சம் சேர்த்து பிசறிக்கொள்ளவும். தேவையென்றால் மட்டன் வேகவைத்த தண்­ணீரை சேர்த்துக்கொள்ளலாம்.

* மட்டன் கலவை நன்கு கறியுடன் சேர்ந்து இருக்கவேண்டும்.

* பொரிப்பதற்கு எண்ணெயை காயவைத்து பொரித்து எடுக்கவும்.

* சுவையான மட்டன் பக்கோடா ரெடி.

இதே மாதிரி சிக்கன் பக்கோடாவும் செய்யலாம். எலும்புடன் அல்லது எலும்பில்லாமல், சிறு சிறு துண்டுகளாக வேக வைத்துக்கொள்ளவும்.

வேர்க்கடலை பிட்லா

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 50 கிராம்
பிஞ்சு கத்தரிக்காய் - 4
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 8
தனியா - ஒரு டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு டீ ஸ்பூன்
மிளகு - 10
வெந்தயம் - 1/4 டீ ஸ்பூன்
கசகசா - ஒரு டீ ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை வேர்க்கடலை புளி கரைசல் - தலா 3 டேபிள் ஸ்பூன்
உப்பு, கடுகு, பெருங்காயம், எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* வேர்க்கடலை மற்றும் துவரம்பருப்பை தனித்தனியாக வேகவைக்கவும்.

* எண்ணெயில் காய்ந்த மிளகாய், தனியா, உளுத்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், கசகசா ஆகியவற்றை வறுக்கவும்.

* வேகவைத்த வேர்க்கடலை + வறுத்த மசாலா சாமான் + ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்துருவல் மூன்றையும் மிக்ஸியில் மைய அரைக்கவும்.

* நீரில் கத்தரி மற்றும் தக்காளியை உப்பு சேர்த்து வேக விடவும்.

* வெந்தபின் புளிக்கரைசலை விடவும்.

* பிறகு அரைத்து வைத்திருக்கும் வேர்க்கடலை விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.

* 10 நிமிடம் கழித்து வெந்த துவரம் பருப்பை நன்கு மசித்து அதில் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.

* பிறகு வாணலியில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் தாளித்துக் கொட்ட வேர்க்கடலை பிட்லை ரெடி!

முட்டை ரவாப்பணியாரம்

தேவையான பொருட்கள்:

முட்டை - 2
ரவை - 150 கிராம்
மைதா - 150 கிராம்
தேங்காய்ப் பால் - 1 கப்
சர்க்கரை - 150 கிராம்
சோடா உப்பு - 2 சிட்டிகை
ஏலக்காய் - 4
முந்திரிப்பருப்பு - 20 கிராம்

செய்முறை:

* முட்டைகளை நுரைக்க அடிக்கவும்.

* ரவை, மைதாமாவு, சர்க்கரை, தேங்காய், அடித்த முட்டை, சோடா உப்பு, ஏலத்தூள், பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பு இவைகளை இட்லி மாவு போல் கரைத்து வைக்கவும்.

* பணியாரச் சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.

* சிறிய கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.

* பணியாரம் எழும்பியதும் திருப்பிப் போட்டு வெந்ததும் எண்ணெய் வடிய வைத்து எடுக்கவும்.

அரிசி பாயசம்

தேவையான பொருட்கள்:

சீரக சம்பா அரிசி - 200 கிராம்
பால் - 2 லிட்டர்
அரைத்த முந்திரிப் பருப்பு விழுது - 100 கிராம்
குங்குமப்பூ - 5 அல்லது 6 இழை
வெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
கிராம்பு - 2
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 150 கிராம்

செய்முறை:

அடி கனமான பாத்திரத்தில் பாலை, குங்குமப்பூ சேர்த்துக் காய்ச்சவும். ஒரு லிட்டர் பாலைத் தனியே எடுத்து வைக்கவும். இன்னொரு அடுப்பில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெயில் அரிசியை வறுக்கவும். அது பிஸ்கட் கலரில் மாறிப் பொரிய ஆரம்பிக்கும் போது எடுத்து, கொதித்துக் கொண்டிருக்கிற பாலில் போட்டுக் கிண்டவும். அரிசி உடைந்து வேக ஆரம்பிக்கும். அப்போது முந்திரி விழுது சேர்க்கவும். தனியே எடுத்து வைத்துள்ள ஒரு லிட்டர் பாலை, கால் லிட்டர், கால் லிட்டராக - 5 நிமிட இடைவெளி விட்டுச் சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். சர்க்கரை, கிராம்பு சேர்க்கவும். கலவை பஞ்சாமிர்தப் பதத்துக்கு வரும் வரை கிளறி, அடுப்பை அணைக்கவும். 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெயை அதில் சேர்க்கவும். மீதி 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெயில் தேங்காய் துருவலை பொன்னிறத்துக்கு வறுத்துச் சேர்க்கவும். லேசான மஞ்சளும் பழுப்பும் கலந்த கலரில் இருக்கும். இந்தப் பாயசத்தை குளிர வைத்துப் பரிமாறவும்.

Saturday, 25 August 2012

பெப்பர் மஷ்ரூம்

தேவையான பொருட்கள்:

பட்டன் மஷ்ரூம் - 200 கிராம்
சோள மாவு - 2 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் - 2 டீ ஸ்பூன்
வெங்காயம் - 1
பால் - 1\4 கப்
பூண்டு - 5 பல்
சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* பட்டன் மஷ்ரூம், வெங்காயம், பூண்டு இவற்றை தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடாயில் நான்கு டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

* இதில் மஷ்ரூம், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்­ரை தெளித்து வேக விடவும்.

* சோள மாவில் பால் சேர்த்துக் கரைத்து, வெந்த மஷ்ரூமில் ஊற்றி நன்றாகக் கிளறி இறக்கவும்.

* கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

* இது பிரெட் டோஸ்டுக்கு ஏற்றது.

* வதக்கும்போது கால் கப் பனீர் துண்டுகளை சேர்த்து செய்தால் சுவை அருமையாக இருக்கும்.

வாத்துகறி குழம்பு

தேவையான பொருட்கள்:

வாத்துகறி - 1 கிலோ
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 2
நீளவாக்கில் அரிந்த தக்காளி - 2
கீறிய பச்சை மிளகாய் - 10
மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
முழுப்பூண்டு - 2
பிரியாணி இலை - 4
புளிக்கரைசல் - 2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு

அரைக்க:

தேங்காய்த்துருவல் - 1/4 கப்
வடகம் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

* வாத்தை மஞ்சள்தூள் சேர்த்து சுத்தம் செய்யவும்.

* புளிக்கரைசலில் உரித்த முழுப்பூண்டு பற்கள், மஞ்சள்தூள் சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு வடகத்தைப் பொரித்து தனியாக வைத்து, அதே எண்ணெயில் தேங்காயையும் பொன்னிறமாக வறுக்கவும்.

* வடகம்-தேங்காய் மைய அரைத்து கடைசியாக சீரகம் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

* பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பிரியாணி இலையைப் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகுத்தூள் என ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.

* வதங்கியதும் புளிக்கரைசலோடு இருக்கும் கறியை ஊற்றி கொதிக்கவிடவும்.

* கறி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

* இந்த குழம்பு புளிப்பாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். அதனால் புளிப்புக்கேத்த மாதிரி புளியை ஊறவைக்கவும்.

சிக்கன் காலிஃப்ளவர் மசாலாக்கறி!

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
காலிஃப்ளவர் - 1 கப்
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
பட்டை லவங்கம் - சிறிதளவு
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 3 அல்லது 4
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

மசாலாவிற்குத் தேவையானவை:

கடலைப்பருப்பு - 3 ஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 6
மிளகு - 2 ஸ்பூன்
பட்டை - சிறிதளவு
சீரகம், சோம்பு - 2 ஸ்பூன்
தேங்காய் துருவியது - 1 கப்

செய்முறை:

* சிக்கனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து திட்டமான பீஸாக்கிக் கொள்ளவும்.

* உப்பும், மிளகாய்த் தூளும் இட்டு சிக்கனை 10 நிமிடம் பிரட்டி வைக்கவும்.

* தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் நீளவாக்கில் அரிந்துக் கொள்ளவும்.

* மசாலாக்களுக்குத் தேவையானவைகளை சட்டியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் இவைகளைப் போட்டு வறுக்கவும்.

* கடைசியாக தேங்காய்பூவையும் போட்டு வறுத்து சற்று ஆறவிட்டு அதை மிக்ஸியில் போட்டு சற்று கரகரப்பாக அரைக்கவும்.

* சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு அது சூடானதும், பட்டை, லவங்கம் போட்டு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் அனைத்தையும் போட்டு பின்பு, காலிஃபிளவரை சேர்த்து லேசாகக் கிளறிவிடவும்.

* அது வதங்கியதும் பின்பு அதோடு இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். அதுவும் சற்று மசங்கியதும், அரைத்த மசாலாவையும் சேர்க்கவும்.

* அது எல்லாம் சேர்வதுபோல் கிளறிவிட்டு மிதமான தீயில் வைத்து வைத்து மூடவும். மசாலா வாசம் போய் நல்ல வாசம் வந்ததும் திறந்து நறுக்கிய கொத்தமல்லியை போட்டு இறக்கவும்.

பாகற்காய் தக்காளிப் புளிக்கறி

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 250 கிராம்
தக்காளிப்பழம் - 250 கிராம்
வெங்காயம் - 5
பூண்டு - 10
வெந்தயம் - 2
மிளகாய் வத்தல் - 5
கறிவேப்பிலை - சிறிது
புளி - 25 கிராம்
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
மிளாகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
நீர் - தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் பாகற்காயை கழுவி வட்ட வட்டமாக வெட்டவும். தக்காளியையும் கழுவி வெட்டவும். வெங்காயம் பூண்டு, மிளகாய் எல்லாவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். புளியை நீரில் கரைத்து அளவாக எடுத்து வைக்கவும். அதன் பின் வாணலியை அடுப்பில் வைத்து எணணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். வதங்கி பொன் நிறமாக வரும் போது பூண்டை சிறிது தட்டி அதனுடன் சேர்த்து வெந்தயத்தையும் போட்டு நன்கு கிளறிக் கொண்டே மிளகாய்த் தூள், உப்புதூள், கரைத்த புளி இவற்றையும் சேர்த்து கறியை நன்கு கிளறி மூடி 5 நிமிடம் வேக விடவும். பின்னர் வற்றியதும் நறுக்கிய தாக்காளியையும் சேர்த்து வேக விடவும். பின்னர் ஆறவிட்டு பறிமாறலாம். சாதம், சாப்பாத்தி, தோசை இவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கொள்ளுப் பருப்பு பொங்கல்

தேவையான பொருட்கள்:

கொள்ளுப் பருப்பு - 1/2 கப்
அரிசி - 1 கப்
நெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* கொள்ளை வாசம் வரும்வரை நன்கு வறுத்து உரலில் குத்தி உமி போக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

* அதை அரிசியுடன் ஒன்றாகக் கலந்து கழுவி உலை கொதித்தபின் போட்டு வேக விடுங்கள்.

* பாதி வெந்ததும் உப்பு போட்டு நன்கு குழைய விடுங்கள்.

* பின், நெய் விட்டு, கூடவே சீரகம், மிளகு இரண்டையும் தாளித்துக் கொள்ளுங்கள்.

* இந்தப் பொங்கலின் ஸ்பெஷல் என்ன தெரியுமா..? இது ஊளைச் சதையைக் குறைக்கும்.

மக்காச்சோள குருணை பொங்கல்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி குருணை - 1 கப்
பாசிப் பருப்பு - 1 கப்
காய்ந்த சோள ரவை - 1
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய்(நறுக்கியது) - 2
மிளகு, சீரகம்(பொடித்தது) - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய், நெய்(கலந்தது) - 1/2 கப்
உடைத்த முந்திரி - 1 கப்

செய்முறை:

* பருப்பு, அரிசி குருணை, மக்காச்சோள ரவையை (ஸ்டோர்களில் கிடைக்கிறது) தனித் தனியாக உடைத்து வாசனை வரும்வரை) வறுத்துக்கொள்ளவும்.

* பிறகு ஒரு குக்கரில் 4-5 கப் தண்­ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு, சிறிது நெய், உடைத்த கலவையும் சேர்த்து, ஒரு விசில் வரும்வரை வேகவிடவும்.

* வெந்தபின் நெய் மற்றும் எண்ணெயில் கடுகு, சீரகம், மிளகு, பச்சை மிளகாய், பெருங்காயம், உடைத்த முந்திரி, இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டிக் கிளறவும்.

* இது ஒரு புதுமையான பொங்கல். வித்தியாசமான சுவை கொண்டது.

வெஜ் பொங்கல்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 4 கப்
பாசிப்பருப்பு - 1 கப்
பெரிய கேரட் - 1
பச்சை பட்டாணி - 1/2 கப்
இஞ்சி - 10 கிராம்(பொடியாக நறுக்கியது)
பூடு - 4 பல்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
மிளகு - 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கடுகு உளுந்து - 1/2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
மல்லித்தழை - சிறிதளவு
எண்ணைய் - 1 குழிக்கரண்டி
நெய் - 100 மி.லி.
முந்திரி - 15
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* கேரட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

* அரிசியை உப்பு போட்டு, நன்கு குழைய வேக வைக்கவும்.

* பாசிப்பருப்பை சிம்மில் சிவக்க வறுத்து, நன்கு குழைய வேக வைக்கவும்.

* தனித்தனியே வேக வைத்த சாதத்தையும் பருப்பையும் ஒன்றாக கிளறவும்.

* கொழ கொழன்னு வருவதற்கு பருப்பு வேக வைத்த தண்ணியை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ண வேண்டும்.

* சாதம் செட்டாகும் நேரத்தில்..., ஒரு கடாயில் எண்ணை ஊற்றி கடுகு உளுந்து, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

* பொரிந்த பின் கேரட்டையும் வேக வைத்த பட்டாணியையும் சேர்த்து வதக்கவும்.

* சாதம், பருப்பு, வதக்கிய காய் எல்லாவற்றையும் நன்கு மிக்ஸ் பண்ணி, 2 கப் தண்ணீ­ர் சேர்த்து குக்கரில் 10 நிமிடம் சிம்மில் வேக வைக்கவும்.

* இறக்கியவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, கொத்தமல்லி, மீதமுள்ள நெய் ஊற்றி பரிமாறவும்.

* தண்­ணீருக்கு பதில் தேங்காய்ப் பால் பயன்படுத்தினால் சுவை இன்னும் பிரமாதமா இருக்கும்.

* புதினா சட்னி இதற்கு சரியான சைட் டிஷ்!

இஞ்சி பொங்கல்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 டம்ளர்
பாசிப் பருப்பு - 1 டம்ளர்
இஞ்சி துருவியது - 1 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி - 2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - 100 கிராம்
எண்ணெய் - 1 கப்
முந்திரி - 50 கிராம்

செய்முறை:

* குக்கரில் பச்சரிசி, பாசிப்பருப்பு, துருவிய இஞ்சி, பெருங்காயத் தூள், உப்பு, தண்ணீ­ர் 5 டம்ளர் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவேண்டும்.

* வாணலியில் நெய், எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், முந்திரி மற்றும் மிளகு சீரகப் பொடி போட்டு வறுத்தெடுத்து கறிவேப்பிலையை கடைசியாகச் சேர்க்கவும்.

* பத்தே நிமிடத்தில் இஞ்சி பொங்கல் ரெடி.

* இதைச் சுடச்சுட பறிமாற நாவில் நீர் சுரக்கும்.

வாழைப்பழப் பொங்கல்

தேவையானப் பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
பொடித்த வெல்லம் - 1 கப்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10
திராட்டை - 12
ஏலக்காய் தூள் - 1 டீ ஸ்பூன்
வாழைப்பழம்(பொடியாக நறுக்கியது) - 2
பால் - 1/2 கப்

செய்முறை:

* அரிசியைக் கழுவிக் கொள்ளவும்.

* பாலுடன் 2 கப் தண்­ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு, கொதித்ததும் அரிசியைச் சேர்க்கவும்.

* சிறு தீயில் குழைய வேக விடவும்.

* வெந்ததும் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, வெந்த அரிசியுடன் சேர்க்கவும்.

* அத்துடன் வாழைப்பழத்தைச் சேர்த்து, ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி, மேலும் நெய் விட்டு இறக்கவும்.

* அட்டகாசமான வாழைப்பழப் பொங்கல் ரெடி.

வெந்தயக்கீரை மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:

வஞ்சிரமீன் - 1/2 கிலோ
வெங்காயம் 200 கிராம்
தக்காளி - 350 கிராம்
தக்காளி பேஸ்ட் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் 2 டீ ஸ்பூன்
தனியாத்தூள் 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள், சீரகத்தூள் தலா - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - ருசிக்கு தேவையான அளவு
வெந்தயம் - 1 டீ ஸ்பூன்
வெந்தயக்கீரை சிறிய கட்டு - 1
புளி ஒன்னறை சிறிய லெமன் சைஸ்

தாளிக்க:

நல்லெண்ணை - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு, சீரகம், சோம்பு, மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 6 பெரிய பல்
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
தேங்காய் பவுடர் (அ) தேங்காய் பத்தை - 4 ஸ்பூன் (அ) 4 பத்தை
கொத்துமல்லி தழை - அரை கைப்பிடி

செய்முறை:

* மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக போடவும்.

* வெந்தயத்தை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

* வெந்தய கீரையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி தண்­ணீரை வடிக்கவும்.

* தக்காளியை மையாக அரைத்து வைக்கவும்.

* தாளிக்க கொடுத்துள்ளவைகளை எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து தாளித்து, பூண்டை தட்டி போட்டு வதக்கி, கருவேப்பிலை சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும்.

* வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கவும்.

* வெங்காயம் வதங்கியதும் எல்லா மசாலா தூள் வகைகள், ஊறிய வெந்தயம், வெந்தயக்கீரை, தக்காளி பேஸ்ட் போட்டு நன்கு 2 நிமிடம் வதக்கவும்.

* அரைத்த தக்காளியை சேர்த்து அரை டம்ளர் தண்­ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.

* பிறகு புளியை ஒரு டம்ளர் தண்ணீ­ரில் கரைத்து வடிகட்டி சேர்க்கவும்.

* 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

* கடைசியாக மீனையும் தேங்காயையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

* கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.

* சுவையான மணமான மருத்துவ குணம் நிறைந்த மேத்தி மீன் குழம்பு ரெடி.

குறிப்பு: வெந்தயமும், நல்லெண்ணையும் சேருவதால் வயிற்றுக்கு எந்த உபாதையும் அளிக்காது. உடல் சூட்டை தணிக்கும் குழம்பு. ப்ளெயின் ரைஸ், ரொட்டி, தோசை, ஆப்பம், குஸ்கா, அனைத்துக்கும் பொருந்தும்

வெந்தயக்கீரை மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:

வஞ்சிரமீன் - 1/2 கிலோ
வெங்காயம் 200 கிராம்
தக்காளி - 350 கிராம்
தக்காளி பேஸ்ட் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் 2 டீ ஸ்பூன்
தனியாத்தூள் 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள், சீரகத்தூள் தலா - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - ருசிக்கு தேவையான அளவு
வெந்தயம் - 1 டீ ஸ்பூன்
வெந்தயக்கீரை சிறிய கட்டு - 1
புளி ஒன்னறை சிறிய லெமன் சைஸ்

தாளிக்க:

நல்லெண்ணை - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு, சீரகம், சோம்பு, மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 6 பெரிய பல்
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
தேங்காய் பவுடர் (அ) தேங்காய் பத்தை - 4 ஸ்பூன் (அ) 4 பத்தை
கொத்துமல்லி தழை - அரை கைப்பிடி

செய்முறை:

* மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக போடவும்.

* வெந்தயத்தை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

* வெந்தய கீரையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி தண்­ணீரை வடிக்கவும்.

* தக்காளியை மையாக அரைத்து வைக்கவும்.

* தாளிக்க கொடுத்துள்ளவைகளை எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து தாளித்து, பூண்டை தட்டி போட்டு வதக்கி, கருவேப்பிலை சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும்.

* வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கவும்.

* வெங்காயம் வதங்கியதும் எல்லா மசாலா தூள் வகைகள், ஊறிய வெந்தயம், வெந்தயக்கீரை, தக்காளி பேஸ்ட் போட்டு நன்கு 2 நிமிடம் வதக்கவும்.

* அரைத்த தக்காளியை சேர்த்து அரை டம்ளர் தண்­ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.

* பிறகு புளியை ஒரு டம்ளர் தண்ணீ­ரில் கரைத்து வடிகட்டி சேர்க்கவும்.

* 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

* கடைசியாக மீனையும் தேங்காயையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

* கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.

* சுவையான மணமான மருத்துவ குணம் நிறைந்த மேத்தி மீன் குழம்பு ரெடி.

குறிப்பு: வெந்தயமும், நல்லெண்ணையும் சேருவதால் வயிற்றுக்கு எந்த உபாதையும் அளிக்காது. உடல் சூட்டை தணிக்கும் குழம்பு. ப்ளெயின் ரைஸ், ரொட்டி, தோசை, ஆப்பம், குஸ்கா, அனைத்துக்கும் பொருந்தும்

Thursday, 23 August 2012

வேர்க்கடலை போண்டா

தேவையான பொருட்கள்:

வறுத்த வேர்க்கடலை - ஒரு கப்
முந்திரி பருப்பு - அரை கப்
பிரட் துண்டுகள் - 2 கப்
பால் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பொரிப்பதற்கு எண்ணை - 400 கிராம்

செய்முறை:

* வேர்க்கடலை, முந்திரி பருப்பு, வெங்காயம், மிளகாய், இஞ்சி, எல்லாவற்றையும் மிக்சியில் கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

* பிரட் துண்டுகளை உதிர்த்து, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து, பால் விட்டு கெட்டியாகப் பிசையவும்.

* தேவையான உப்பைக் கடைசியாகச் சேர்த்து நன்கு கலக்கவும்.

* கடாயில் எண்ணை ஊற்றி நன்கு காய்ந்ததும், செய்துவைத்திருக்கும் கலவையை போண்டாக்களாக கிள்ளி எண்ணையில் போடவும்.

* நன்கு சிவந்து மொறு, மொறுப்பானதும் வடிகட்டியில் போடவும்.

* ஒருதட்டில் வைத்து சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: கடலை மாவு சேர்க்காதலால் குழந்தைகள், பெரியவர்கள் என எல்லாருக்குமே கொடுக்கலாம்.

Wednesday, 22 August 2012

கருப்பட்டி பொங்கல்

தேவையான பொருட்கள்:

கருப்பட்டி தூள் - 1 கப்
அரிசி - 1 கப்
பால் - 3 கப்
தண்ணீ­ர் - 3 கப்
நெய் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1/4 டீ ஸ்பூன்
முந்திரி - 4
உலர் திராட்சை - 1 டீ ஸ்பூன்
பாதாம் - 4 (விருப்பப்பட்டால்)
பிஸ்தா - 1 டீ ஸ்பூன்(விருப்பப்பட்டால்)

செய்முறை:

* முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்­ணீர் மற்றும் இரண்டு கப் பால் மற்றும் அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்.

* இன்னொரு பாத்திரத்தில் கருப்பட்டி தூள் சேர்த்து கால் கப் தண்ணீ­ர் சேர்த்து தணலை சிம்மில் வைத்து கம்பி பாகு காய்ச்சி கொள்ளவும்.(சாதம் லேசாக வேக ஆரமித்ததும் பாகு காய்ச்ச ஆரமித்தால் போதும்..பாகு ஆனவுடனேயே சாதத்தில் சேர்த்து கிளறனும் இல்லாவிட்டால் பாகு இருக்கிப்போய்விடும்..)

* பாத்திரத்தில் வேக வைத்த அரிசியை அடிக்கடி கிளறி விடவும்.

* பாலும் தண்­ணீரும் வற்றியவுடன் காய்சிய பாகை சேர்த்து நன்கு கிளறவும்.

* மீதம் உள்ள ஒரு கப் பாலையும் சேர்த்து நன்கு கிளறவும்.

* கொதிக்க ஆரம்பிக்கும்.

* எடுத்து வைத்துள்ள நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறவும்.

* எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

* முந்திரி திராட்சையை சேர்த்து கிளறவும்.

* பாதாம் மற்றும் பிஸ்தாவை துருவி சேர்க்கவும்.

* சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.

குறிப்பு: பாகு சரியான பதம் வருவதற்கு எழு முதல் பத்து நிமிடங்கள் வரை ஆகும். (சிம்மில் மட்டுமே வைக்கவும்)

கருப்பட்டி சேர்த்து செய்வதால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் கொடுக்கலாம்.

நெய் வேண்டுமானால் அதிகமாக சேர்த்து கொள்ளலாம்.

கற்கண்டு பொங்கல்

தேவையான பொருட்கள்:

கற்கண்டு (டைமண்டு) - 1/4 கிலோ
பச்சரிசி - 1 கப்
பாசி பருப்பு - 1/2 கப்
தட்டிய ஏலக்காய் - 1 டீ ஸ்பூன்
காய்ந்த திராட்சை - சிறிதளவு
முந்திரி - 100 கிராம்
எண்ணெய் - 50 கிராம்
நெய் - 100 கிராம்
பால் - 1/2 டம்ளர்

செய்முறை:

* முதலில் அரிசி பருப்பை கழுவி 4 டம்ளர் தண்­ணீருடன் பால் சேர்த்து குக்கரில் வேக விட வேண்டும்.

* பிறகு வெந்தவுடன் ஏலக்காய் பொடி கற்கண்டை சேர்த்து கிளறவும்.

* பிறகு வாணலியில் நெய் ஊற்றி எண்ணெயும் சேர்த்து முந்திரி திராட்சை வறுத்துக் கொட்டி கிளறி இறக்கவும்.

* பத்தே நிமிடத்தில் கற்கண்டு பொங்கல் ரெடி.

* பண்டிகை நாட்களில் கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்து சாப்பிட இது மிகவும் உகந்த உணவாகும்.

சிக்கன் தோசை

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி - 200 கிராம்
மைதா மாவு - 250 கிராம்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி, பூண்டி விழுது - 2 டீ ஸ்பூன்
காரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* கோழிக்கறியை எலும்பில்லாமல் தேர்வு செய்து துவையல் பக்குவத்தில் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும்.

* அதனுடன் மைதா, அரிசி மாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், காரட் துருவல், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீ­ர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.

* பின்பு தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு மாவை ஊற்ற வேண்டும்.

* மேல் பக்கத்திலும் சிறிது எண்ணெய் விட்டு, நன்றாக வெந்தபின்பு மறுபக்கம் திருப்பி போடவும்.

* இரண்டு பக்கமும் தோசை நன்றாக வெந்ததும் தோசைக் கல்லில் இருந்து எடுத்து விடவும்.

பனீர் வெஜிடபிள் பிரியாணி

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 1 கப்
கெட்டித் தயிர் - 1 கப்
நெய் - 6 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 4
பனீர் - 100 கிராம்
உப்பு - 11/2 டீ ஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சி விழுது - 1/2 டீ ஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்
தக்காளி - 2
பீன்ஸ் - 8
கேரட் - 1
காலிபிளவர் - 8 சிறிய பூக்கள்
நூல்கோல் - 1

வறுத்து அரைக்க:

கிராம்பு - 2
பட்டை - 1 சிறிய துண்டு
சோம்பு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
தேங்காயத் துருவல் - 6 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
பச்சை மிளகாய் - 2

செய்முறை:

* பாசுமதி அரிசியைக் களைந்து 1 கப் தண்­ணீரில் ஊற வைக்கவும்.

* சிறிது நெய்யில் அரைக்க கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்கள் (தேங்காய்த்துருவல் நீங்கலாக) வறுத்து அதனுடன் தேங்காய் துருவல், சிறிது தண்ணீ­ர் சேர்த்து மிக்சியில் போட்டு மசிய அரைத்துக் கொள்ளவும்.

* ஒரு குக்கரில் மீதியுள்ள நெய் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, இஞ்சி, விழுது, பூண்டு, பிரிஞ்சி ஆகியவை அரைத்த விழுதுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.

* வதக்கிய கலவை நன்கு நெய்யை விட்டுப் பிரிந்தவுடன் பொடியாக நறுக்கிய காய்கள், காலிபிளவர் பூக்கள், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர் சேர்த்து சிறிது வதக்கவும்.

* தண்­ணீருடன் ஊறிய பாசுமதி அரிசி, தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி 2 விசில் விட்டு சிம்மில் 5 நிமிடம் வைத்து அணைக்கவும்.

குறிப்பு: பச்சைப் பட்டாணி, குடமிளகாய் போன்ற காய்களையும் கூடுதலாக சேர்த்து பிரியாணியின் ஆரோக்கிய சுவையைக் கூட்டலாம். நெய்க்கு பதிலாக எண்ணையும் உபயோகிக்கலாம்.

முடக்கத்தான் தோசை!

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 1 கப்
முடக்கத்தான் இலை - 2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* அரிசியையும், வெந்தயத்தையும் ஊற வைத்து தோசை மாவுக்கு அரைப்பது போலவே அரைத்து, அதனுடன் முடக்கத்தான் இலையையும் நன்கு கழுவிப் போட்டு அரைத்து விடவும்.

* மூன்றையும் ஒன்றாகவே போட்டு அரைக்கலாம்.

* மிகவும் நைசாக முதல் நாள் இரவே அரைத்து வைத்து விடவும்.

* மறுநாள் தோசைக்கல்லில் தோசை போல வார்க்கவும்.

* இதற்கு தேங்காய் சட்னி, பூண்டுச் சட்னி - இரண்டுமே நன்றாக இருக்கும்.

இதன் சிறப்பு:

* வாத நோய் வராமல் தடுக்கிறது.

* பித்தத்தை சுத்தமாக அகற்றி விடுகிறது.

* சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.

மாங்காய் தக்காளி சாதம்

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி - 2 கப்
சிறிய மாங்காய் - 1
பெரிய வெங்காயம் - 4
காய்ந்த மிளகாய் - 4
சாம்பார் பொடி - 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
தக்காளி - 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு - கடுகு, சிறிது கறிவேப்பிலை
தண்ணீ­ர், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

* அரிசியைக் கழுவி சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரித்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மாங்காய், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி சிறிது தண்­ணீர்விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.

* பத்து நிமிடத்திற்கு பிறகு இறக்கி ஆறியதும் சாதத்துடன் கலந்து பரிமாறவும். மாங்காய்த் தக்காளிச் சாதம் தயார்.

மல்ட்டி கலர் வைட்டமின் கூட்டு

தேவையானவை:

தர்ப்பூசணி துண்டுகள் (வெள்ளை பாகம்) - 2 கப்
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
பயத்தம் பருப்பு - 1/4 கப்
கடலைப்பருப்பு - 2 டீ ஸ்பூன்
மிளகு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீ ஸ்பூன்
தேங்காய்த் துருவல் (விருப்பப்பட்டால்) - 4 டீ ஸ்பூன்
கேரட் துண்டு, பட்டாணி (பச்சை) - 1/4 கப்

செய்முறை:

* பயத்தம் பருப்பையும், கடலைப் பருப்பையும் சுத்தம் செய்து 1/2 கப் தண்­ணீர் விட்டு, தர்ப்பூசணி துண்டுகளை அதில் போட்டு குக்கரில் வேகவிட்டு எடுக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், மிளகாய்வற்றல் இவற்றை வறுத்து, அரைத்து எடுக்கவும்.

* அதே எண்ணெய் கடாயில் கடுகை வெடிக்கவிட்டு, பெருங்காயம் சேர்த்து, பச்சை பட்டாணி, கேரட் துண்டுகள் (மெலிதாக நறுக்கியது) சேர்த்து 1 நிமிடம் வதக்கியதும், வேக வைத்துள்ள தர்ப்பூசணி, பருப்பு கலவையைச் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்கவிடவும்.

* கொதித்து வரும்போது அரைத்து வைத்துள்ள கலவையைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் தீயை நிறுத்திவிடவும்.

* கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.

* தேங்காய் துருவல் சேர்த்தால் கூடுதல் ருசியைக் கொடுக்கும்.

* இது சத்தானது. புதுமையானது. வித்தியாசமானது. சுவையானது. வீணாக்காமல் பயன்படுத்திய திருப்தி கிடைக்கும்.

குறிப்பு: தேங்காய் சேர்க்காமலும் செய்யலாம்.

வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்:

முந்திரிப் பருப்புகள் - 1/4 கிலோ
ஆப்பிள் சாறு - 1 கப்
பழுத்த வாழைப்பழங்கள் (பச்சைநாடன் போலப் பெரியது) - 3
பால் - 1 கப்
தேன் - 3 டேபிள் ஸ்பூன்
வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

* முந்திரிகளை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக்கொண்டு அதனுடன் ஆப்பிள் சாறு ஊற்றி, கலவை மாவாக, நுண்ணியதாக அரைபடும் வரை அரைக்கவும்.

* இத்துடன் வாழைப்பழம், பால், தேன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் போட்டு மென்மையானதாக அரைத்துக்கொள்ளவும்.

* இதனை ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு ஃப்ரீசரில் உறைய விடவும்.

* இரவு முழுவது உறைந்த பின்னர், ஐஸ்கிரீம் கோப்பைகளில் போட்டு பறிமாறலாம். வெய்யிலுக்கு சாப்பிட இனிது.

தயிர் உருளை

தேவையான பொருட்கள்:

சிறிய உருளை கிழங்கு - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
சற்று புளித்த தயிர் - 1/2 கப்
இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துகொள்ளுங்கள்.

* வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கவும்.

* எண்ணெய் காய வைத்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

* பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

* பின்னர் உருளைக்கிழங்கு சேர்த்து 10 நிமிடம் சிறு தீயில் வைத்து வதக்கவும்.

* பின்னர் கரம் மசாலா, தயிர் சேர்த்து சுருள கிளறி இறங்குங்கள்.

* பிரட், பூரி, சப்பாத்திக்கு சூப்பர் சைடு டிஷ் இது.

பருப்பு ரசம்

தேவையான பொருட்கள்:

புளி - சிறிய எலுமிச்சை அளவு
தக்காளிப் பழம் - 3
ரசப்பொடி - 1 டீ ஸ்பூன்
துவரம் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - 1 டீ ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
சீரகம் - 1/4 டீ ஸ்பூன்
கறுப்பு மிளகுத்தூள் - 1/4 டீ ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
கொத்துமல்லித் தழை - தேவையான அளவு

செய்முறை:

* புளியை சிறிது தண்ணீ­ருடன் கொதிக்க விட்டு சற்று ஆறியதும் கையால் நன்கு கசக்கி ஒரு உலோக வடிகட்டியில் போட்டு வடிகட்டி சாறை எடுத்துக்கொள்ளவும்.

* புளிச்சாறுடன் சிறிது தண்ணீ­ர், ரசப்பொடி, உப்பு சேர்த்து புளி நெடி மற்றும் ரசப்பொடி நெடி அடங்க அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.

* பிறகு பெருங்காயம் 1 சிட்டிகை சேர்த்து மேலும் ஒரு கொதி விடவும்.

* நல்ல பழமாக உள்ள தக்காளிகளை சிறு துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் புளி நீருடன் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.

* துவரம் பருப்பை மஞ்சள்தூள், தண்­ணீர் சேர்த்து குக்கரில் வைத்து குழைய வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.

* பிறகு துவரம் பருப்பு மற்றும் நீரை கொதிக்கும் ரசத்தில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து நடுநடுவே கரண்டியால் கலந்து விடவும்.

* ரசம் நுரைத்துப் பொங்கி வருகையில் அடுப்பை அணைத்து தாளித்து விட்டால் பருப்பு ரசம் தயார்.

* பரிமாறுகையில் பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: புதுப்புளி மற்றும் நாட்டுத் தக்காளி உபயோகித்தால் ரசம் மிகவும் சுவையாக இருக்கும்.

மாம்பழப் பாயசம்

தேவையான பொருட்கள்:

இனிப்பான மாம்பழங்கள் - 4
சர்க்கரை - 150 கிராம்
பால் - அரை லிட்டர்
உடைத்த முந்திரிப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த திராட்சை - அரை டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு

செய்முறை:

* மாம்பழங்களைக் கழுவி ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

* சூடு ஆறியதும் தோல், கொட்டை இவற்றை நீக்கிவிட்டுச் சாறெடுத்து இரண்டு கப் தண்­ணீர் சேர்த்து அத்துடன் சர்க்கரையையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

* நன்றாகக் கொதித்ததும் இறக்கி வைத்து முந்திரி கிஸ்மிஸ் பழங்களை நெய்யில் வறுத்து அத்துடன் சேர்த்து நன்றாக ஆற வைக்க வேண்டும்.

* பாலில் கொஞ்சம் தண்­ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி வைக்க வேண்டும்.

* மாம்பழச் சாறு ஆறியவுடன் பாலுடன் ஏலக்காய்ப் பொடியைத் தூவி கலக்கிவிட்டு பரிமாறவும்.

Tuesday, 21 August 2012

முருங்கை பெப்பர் சிக்கன்

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
முருங்கைக்காய் - 4
வெங்காயம் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு - 1 டீ ஸ்பூன் (விழுதாக்கியது)
சீரகம் - 1 டீ ஸ்பூன்
மிளகுத் தூள் - 4 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 6
கொத்தமல்லி இலை - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1 குழிக்கரண்டி

செய்முறை:

* சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். முருங்கைக் காயையும் துண்டுகளாக்கவும்.

* ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

* பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்காய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கி, சிறிது நீர் சேர்க்கவும்.

* இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து சிக்கனையும் அதில் போட்டு மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* சிக்கன், முருங்கைக்காய் நன்கு வெந்ததும், மிளகுத் தூளைச் சேர்த்துக் கிளறவும்.

* நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Sunday, 8 July 2012

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி

தேவையான பொருட்கள்:

பிரியாணி அரிசி - 1 டம்ளர்
பீன்ஸ், கேரட், காலி பிளவர், பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு, நூல்கோல் எல்லாம் சேர்த்து நறுக்கிய துண்டங்கள் - 3 டம்ளர்
நெய - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
முந்திரிப் பருப்பு - 20
கிராம்பு - 6
லவங்கப்பட்டை - 6
ஏலக்காய - 6
வெள்ளைப் பூண்டு உரித்தது - 10 பல்லு
பெரிய தேங்காய - 1/2 மூடி
உப்பு - 2 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2

செய்முறை:

* முதலில் காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி திட்டமாகத் தண்ணீ­ர் வைத்து வேகவைத்துக்கொள்ள வேண்டும்.

* தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.

* கிராம்பு, பட்டை, ஏலக்காய் முதலியவைகளை அம்மியில் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

* கனமான வெங்கல உருளி அல்லது ஈயம் பூசிய பித்தளைப் பாத்திரத்தில் நெய்யை வைத்துக் காய்ந்தவுடன், முந்திரிப் பருப்பையும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு முதலியவைகளையும் போட்டுச் சிவப்பாக வறுபட்ட உடன் அம்மியில் வைத்துத் தட்டிய பொடியையும் போட்டு தேங்காய்ப் பாலும் தண்­ணீருமாகச் சேர்த்து 2 1/2 டம்ளர் விட்டு, கொதிக்கும்பொழுது அரிசியைக் கழுவிப் போட வேண்டும்.

* தீயைக் குறைத்து நிதானமாக எரியவிட வேண்டும்.

* அரிசி நன்றாக வெந்த பிறகு உப்பு, வெந்த காய்கறிகளையெல்லாம் போட்டுக் கிளறி இறக்கி வைக்க வேண்டும்.

* இதுக்கு வெங்காயத் தயிர் பச்சடி நன்கு பொருத்தமாக இருக்கும்.

வெண்டைக்காய் சாம்பார்

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு - 150 கிராம்
வெண்டைக்காய் - 1/4 கிலோ
பெ.வெங்காயம் - 1
ப.மிளகாய் - 3
தக்காளி - 3 (மீடியம் சைஸ்)
புளி - 25 கிராம்
சாம்பார் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு

தாளிக்க:

சி.வெங்காயம் - 5
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, உளுந்து - தேவையான அளவு
கருவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

* பருப்பை வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

* வெண்டைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு எண்ணெய்விட்டு வதைக்கி வைத்துக்கொள்ளவும்.

* வேக வைத்த பருப்பில் சாம்பார் பொடியை போட்டு புளிக்கரைசலை விட்டு தக்காளி, வெங்காயம், ப.மிளகாய் ஆகியவைகளை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பிறகு வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பிறகு கடுகுஉளுந்து, கருவேப்பிலை, சி.வெங்காயம், ஆகியவைகளை சேர்த்து தாளிக்கவும்.

* தாளித்தவுடன் தேங்காய் துறுவலை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.

* பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்தமல்லியை சேர்க்கவும்.

* கமகமக்கும் சுவையான சாம்பார் ரெடி.

* அப்பறென்னங்க ஒங்க வீடே ஒரே சாம்பார் வாசனையாதான் இருக்கும்.

Saturday, 7 July 2012

ஃப்ரூட் சாலட்

தேவையான பொருட்கள்:

தோல் சீவி சிகப்பான பகுதியை துண்டுகளாக்கிய தர்பூசணி - 1 கப்
கிர்ணிப்பழம் - 1 கப்
முலாம் பழம் - 1 கப்
இனிப்பான நார் இல்லாத மாம்பழம் - 1 கப்
இளசாக உள்ள நுங்கு துண்டுகள் - 1 கப்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
தேவையானால் கஸ்டர்டு பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
பால் - 1 கப்

(இது தவிர வாழைப்பழத் துண்டுகள் - 1 கப், கொட்டையில்லாத திராட்சை - 1 கப், பப்பாளி (இனிப்பானது) துண்டுகள் - 1 கப், காஸ் மீது வைத்து அரை நிமிடம் சுட்டு, தோல் நீக்கி, குறுக்கே வெட்டி, விதைகள் நீக்கி துண்டுகள் போட்ட இனிப்பான பெங்களூர் தக்காளி - 1 கப் என்று எந்தப் பழம் சீப்பாக கிடைக்கிறதோ, அதை எடுத்துக்கொள்ளலாம்.)

செய்முறை:

* எல்லாவற்றையும் சேர்த்து நறுக்கி ப்ரிட்ஜ்ஜில் ட்ரேயில் வைக்கவும்.

* பால் சூடாக்கி, குளிர்ந்த பால் கரைத்த கஸ்டர்டு பவுடரை அதில் ஊற்றி அடி பிடிக்காமல் கொதித்ததும் நன்கு ஸ்பூனால் குழைத்து ஆறியதும் தேன், வெனிலா எசன்ஸ் சேர்த்து ப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.

* குழந்தைகளுக்குத் தேவையான போது பழக் கலவையின் மீது - 1 ஸ்பூன் கஸ்டர்ட் போட்டு கிண்ணத்தில் கொடுத்தால் எல்லா பழங்களையும் சாப்பிடுவார்கள்.

* சுமார் - 15 குழந்தைகள் பங்குபெறும், பிறந்தநாள் விழா அல்லது கெட் டு கெதர் பார்ட்டிக்கு - 2 மாம்பழம், - 1 கிர்ணிப்பழம், - 1 முலாம் பழம், - 4 தக்காளி, 100 - கிராம் திராட்சை, - 10 நுங்கு போதும். குறைந்த செலவில் சத்தான சுவையான விலை குறைவான சாலட் ரெடி. தோல் சீவிக் கொடுத்து விட்டால் அவர்களே தயாரித்து விடுவார்கள்.

சோயா பீன்ஸ்-உருளை பால்கறி

தேவையான பொருட்கள்:

உரித்த சோயா பீன்ஸ் - 1/4 கிலோ
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
தக்காளி பெரியது - 3
பூண்டு பெரிய பல் - 4

அரைக்க:

தேங்காய் சிறியது - 1
பச்சைமிளகாய் - 6
சோம்பு - 1 டீ ஸ்பூன்
கசகசா - 1 டீ ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் - தேவையான அளவு
இலவங்கப்பட்டை - சிறிதளவு
ஏலக்காய் - 1
கிராம்பு - 1
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கருவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

* உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

* சோயா பீன்ஸை அரை வேக்காடு வேக வைத்துக்கொள்ளவும்.

* தேங்காயை துறுவி அதோடு பச்சைமிளகாய், சோம்பு, கசகசா சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

* பூண்டை தட்டி வைத்துக்கொள்ளவும்.

* இப்போது வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, வெங்காயம், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

* தாளித்தவுடன் நறுக்கி வைத்த தக்காளி பழத்தை சேர்த்து வதக்கவும்.

* பின்பு அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை சிறிது நேரம் வதக்கவும்.

* பின்பு தேவையான தண்ணீ­ர் ஊற்றி அரை வேக்காடு வேக வைத்த பீன்ஸை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

* அதோடு தட்டி வைத்த பூண்டை கொதிக்கும் பால்கறியில் சேர்க்கவும்.

* இப்போது நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

* கொத்தமல்லியை பொடிப் பொடியாக நறுக்கி இறக்கி வைத்த பால்கறியில் தூவவும்.

* கமகமக்கும் சோயா பீன்ஸ்-உருளை பால்கறி ரெடி.

* இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையுடன் இருக்கும்.

குறிப்பு: தேங்காயை நைசாக அரைக்காமலும், திப்பி திப்பியாக அரைக்காமலும் ஓரளவு நன்றாக அரைத்துக்கொள்ளவும். தேங்காய் பால் எடுத்துகூட செய்யலாம். பால் நல்ல திக்காக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

கத்திரிக்காய் ஃப்ரை

தேவையான பொருட்கள்:

பெரிய கத்திரிக்காய் - 1
சிக்கன் 65 மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* கத்திரிக்காயை சிறிது தடிமனாக வட்டமாக நறுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் சிக்கன் மசாலா, எலுமிச்சை சாறு, உப்பு, இஞ்சி-பூண்டு விழுது, எண்ணெய் 2 டீ ஸ்பூன் என அனைத்தையும் ஒன்றாக கலந்து கத்திரிக்காயில் தடவி 10 நிமிடம் வைக்கவும்.

* நான் ஸ்டிக் கடாயில் சிறுதீயில் இரண்டு புறமும் வேகவைத்து எடுக்கவும். ஏற்கனவே எண்ணெய் சேர்த்து பிசைந்திருப்பதால் தேவையானால் மட்டும் எண்ணெய் விட்டு வேகவைக்கவும்.

* சாம்பார், தயிர், ரசம் சாதமுடன் சாப்பிட மிகவும் நன்றாகயிருக்கும்.

ஹோம் மேட் சாக்லேட்

தேவையான பொருட்கள்:

டார்க் சாக்லேட் பார் - 1
பிரவுன் சாக்லேட் பார் - 1
முந்திரி, திராட்சை, பாதாம், ஜாம் - தேவையானது

செய்முறை:

* சாக்லேட் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

* டார்க் சாக்லேட் பார், பிரவுன் சாக்லேட் பார் ரெண்டையும் கத்தியால் துண்டுகளாக கட் பண்ணி வைக்கவும், அல்லது துருவி வைக்கவும். அதே போல் ட்ரை புரூட்ஸையும் நறுக்கி வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீ­ர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

* அந்த பாத்திரத்தின் மேல், வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதனுள் நறுக்கி வைத்திருக்கும் சாக்லேட் பீஸ்களை கொட்டவும்.

* கேஸை ஒரே சூட்டில் வைத்திருக்கவும் அப்போது தான் சூடு மேல் இருக்கும் பாத்திரத்துக்கு சீராக வரும்.

* சாக்லேட் பீஸ்களை போட்ட பின் ஸ்பூனால் கட்டி இல்லாமல் நன்கு கலக்க வேண்டும்.

* சாக்லேட் உருகி தோசை மாவு பதத்திற்கு வர வேண்டும்.

* பின்னர், சாக்லேட் ட்ரே எடுத்து அதனுள் ஊற்ற வேண்டும்.

* ட்ரேவில் உள்ள வடிவத்தில் கால் பாகம் மட்டும் நிரப்பவும்.

* அதன் மேல் நறுக்கி வைத்திருக்கும் ட்ரை ப்ரூட்ஸ் போடவும்.

* பின்னர், அதன் மேல் மீண்டும் சாக்லேட் கலவையை ஊற்ற வேண்டும்.

* இந்த ட்ரேயை எடுத்து ப்ரீசரில் 15 நிமிடம் வைக்கவும். பின்னர் எடுத்து குழந்தைகளுக்கு தரவும்.

* எல்லா டிபார்ட்மெண்டல் கடைகளிலும், இந்த சாக்லேட் பார் கிடைக்கும்.

குறிப்பு: கீழ் வைக்கும் பாத்திரத்தை விட, மேல் வைக்கும் பாத்திரம் பெருசாக இருக்க வேண்டும், அப்போது தான் ஆவி வெளியில் போகாமல் சாக்லேட் உருக ஈசியாக இருக்கும். சாக்லேட் கலவையை கலக்கி கொண்டே இருக்க வேண்டும். இல்லைனா, கெட்டியாக வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் கீழ் உள்ள பாத்திரத்தில் தண்ணீ­ர் கம்மியானால், ஊற்றவும். சாக்லேட் ட்ரே இல்லை என்றால், ப்ரிட்ஜில் வைக்கும் ஐஸ் க்யூப் ட்ரே உபயோகப்படுத்தலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடற ஹோம் மேட் சாக்லேட் கம்மி செலவுல, வீட்டிலேயே பண்ணலாம். ட்ரைப்ரூட்ஸ் பதிலாக, நம்ம விருப்பத்துக்கு என்ன வேண்டும் என்றாலும் சேர்க்கலாம். உதாரணத்துக்கு: டியூட்டி ப்ரூட்டி, ஓட்ஸ், ஜாம், வேபெர்ஸ், மேரி கோல்ட் பிஸ்கட், ஹார்லிக்ஸ், ப்ரூட் பல்ப், லிட்டில் ஹார்ட் பிஸ்கட், போலோ ஆகியவைகள்.

அரைநெல்லிக்காய் சாதம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்
அரை நெல்லிக்காய் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 10
தேங்காய் துருவல் - 2 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1 டீ ஸ்பூன்
கடுகு, உளுந்து, மஞ்சள்தூள் - தலா 1/2 டீ ஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கு

செய்முறை:

* அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடியுங்கள்.

* நெல்லிக்காய்களை சுத்தம் செய்து கொட்டைகளை நீக்குங்கள்.

* 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து வதக்குங்கள்.

* பிறகு நெல்லிக்காய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி நைசாக அரைத்தெடுங்கள்.

* மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பலை, ஆகியவற்றை தாளியுங்கள்.

* சாதத்தில் நெல்லிக்காய் விழுது, கடுகு ஆகியவற்றை சேர்த்து கிளறுங்கள்.

தேங்காய் ரசம்

தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் - 1 கப்
பூண்டு - 5
தக்காளி விழுது - 1/2 கப்
பச்சை மிளகாய் - 3
மிளகுத்தூள் - 1 டீ ஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்
கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி அளவு
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு:

நெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம், கடுகு - சிறிதளவு
மெலிதாகச் சீவிய பூண்டு - 2
கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

* தக்காளியை சுடு நீரில் வைத்து, 10 நிமிடம் கழித்து, மேல் தோல் நீக்கி விட்டு விழுதாக அரைக்கவும்.

* தேங்காய், பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு தண்­ணீர் ஊற்றி, அதில் தக்காளி விழுது சேர்த்துக் கொதிக்க விடவும்.

* பின் அதில் அரைத்த தேங்காய் விழுது, உப்பு, மிளகு தூள், மல்லித்தூள் போட்டு லேசாக கொதிக்க விடவும்.

* நுரைத்து வந்தால் போதும். நெய்யில் தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

* ஆந்திர மக்கள் இந்த ரசத்தைப் பொங்கலுடன் சேர்த்து சாப்பிடுகின்றனர். இது சாதத்துடன் பரிமாறவும் ஏற்றது.

சிக்கன் கோலா உருண்டை குழம்பு

தேவையான பொருட்கள்:

சிக்கன்(Skinless, Boneless Chicken) - 1/4 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

இஞ்சி பூண்டு விழுது:

இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 10 பல்
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பட்டை - 1

சிக்கன் உருண்டைகள் செய்ய:

வெங்காயம் - 1
அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
பொட்டுகடலை - 1/2 கப்
எண்ணெய் - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
சோம்பு தூள் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

குழம்பு தாளிக்க:

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு - 1
சோம்பு தூள் - 1 டீ ஸ்பூன்

குழம்பில் சேர்க்க வேண்டிய தூள் வகைகள்:

மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

அரைத்து கொள்ள: (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)

தேங்காய் - 1 சிறிய துண்டு
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்

கடைசியில் சேர்க்க:

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

* வெங்காயம், தக்காளியினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இஞ்சி, பூண்டு விழுதினை அரைத்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி குழம்பிற்கு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை இஞ்சி, பூண்டு விழுதினை பாதி + வெங்காயம் என்று ஒன்றின்பின் ஒன்றாக சேர்த்து வதக்கி கொள்ளவும்.

* வெங்காயம் சிறிது வதங்கியவுடன் தக்காளியினை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

* புளியினை 2 - 3 கப் தண்ணீ­ர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

* புளி தண்­ணீருடன் குழம்பிற்கு சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து கலந்து கொண்டு கடாயில் ஊற்றி கொதிக்கவிடவும்.

* சிக்கனை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

* வெங்காயத்தினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பொட்டுகடலையினை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* சிக்கன் + வெங்காயம் + தூள் வகைகள் + அரைத்த பொட்டுகடலை + இஞ்சி-பூண்டு விழுது என அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

* சிக்கன் கலவையினை சிறிது எண்ணெய் தொட்டு சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

* தேங்காய் + கசகசா + சிறிது தண்ணீ­ர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து கொள்ளவும்.

* புளிகரைசல் நன்றாக கொதித்த பிறகு, தேங்காய் விழுதினை சேர்த்து 3 - 4 நிமிடங்கள் வேகவிடவும்.

* கொதிக்கும் பொழுது, உருட்டி வைத்துள்ள சிக்கன் உருண்டைகளை குழம்பில் ஒவ்வொன்றாக மெதுவாக போடவும்.

* சுமார் 15 நிமிடங்களில் சிக்கன் உருண்டைகள் அனைத்தும் குழம்பில் வெந்து மேலே மிதக்கும்.

* கடைசியில் கொத்தமல்லி தூவி பறிமாறவும்.

* சுவையான எளிதில் செய்ய கூடிய குழம்பு ரெடி.

கவனிக்க:

* புளியினை அதிகம் சேர்க்க வேண்டாம். புளிக்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம்.

* சிக்கன் உருண்டைகள் மிகவும் தண்ணியாக பிடிக்கவரவில்லை என்றால் சிறிது பொட்டுகடலை மாவு சேர்த்து கொள்ளவும்.

* சிக்கன் உருண்டைகளை உருட்டும் பொழுது எண்ணெய் சிறிது தொட்டு கொண்டு உருட்டினால் எளிதில் உருண்டை வரும்.

* குழம்பில் சிக்கன் உருண்டைகளை போடும் பொழுது ஒவ்வொன்றாக எடுத்து போடவும். (பயம் வேண்டாம்..கண்டிப்பாக உருண்டைகள் உடையாது.)

* விரும்பினால் எண்ணெயில் பொரித்தும் உருண்டைகளை குழம்பில் சேர்க்கலாம்.

முள்ளங்கி சப்பாத்தி

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி - 2
கோதுமை மாவு - 1 கப்
சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்
ஓமம் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
தனியாத் தூள் - 1/2 டீ ஸ்பூன்
எண்ணை - 8 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/2 டீ ஸ்பூன்

செய்முறை:

* முள்ளங்கியை நன்கு கழுவி பூத்துருவலாக துருவிக் கொள்ளவும்.

* வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்த மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத் தூள், ஓமம் சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்கி கோதுமை மாவுடன் சேர்க்கவும்.

* துருவிய முள்ளங்கி, உப்பு சேர்த்து மாவை நன்கு கலந்து தேவையானால் சிறிது தண்­ணீர் சேர்த்து (முள்ளங்கித் துருவலிலேயே தண்­ணீர் இருக்குமாதலால் தேவையானால் மட்டுமே தண்ணீ­ர் சேர்க்கவும்) சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்.

* பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தியாகத் தட்டி, ஒரு தோசைக் கல் அல்லது நான்ஸ்டிக் தவாவில் போட்டு இரு பக்கமும் எண்ணை ஊற்றி திருப்பிவிட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்பு:

சப்பாத்தியின் சுவை மற்றும் ஆரோக்கிய சுவையை அதிகரிக்க கேரட் துருவலையும், முள்ளங்கித் துருவலுடன் சேர்க்கலாம்.

முள்ளங்கியையும் ஓமத்தையும் இணைத்து சப்பாத்தி செய்து உடலாருக்கு வழங்குவதானது சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சமையல்தானே!

பட்டர் சிக்கன்

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்(துருவியது)
பூண்டு - 3
பல்லாரி - 2
தக்காளி - 3
சின்ன வெங்காயம் - 5
மல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்
மிளகாய்தூள் - டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
புதினா - 10 இலைகள்
மல்லித்தழை - 1 கொத்து
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

* நன்கு கழுவி சுத்தம் செய்த சிக்கனுடன் உப்பு, மிளகாய்பொடி, மல்லித்தூள், மஞ்சள்தூள், புதினா, பொடிப்பொடியாக நறுக்கிய மல்லித்தழை, தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் சேர்க்கவும்.

* நீளவாக்கில் அரிந்த பல்லாரியில், சிறிதளவு(அரை பல்லாரி) மாத்திரம் எடுத்து வைத்துக்கொண்டு மீதமுள்ள பல்லாரியை சிக்கனுடன் சேர்த்து குக்கரில் தண்ணீ­ர் சேர்க்காமல் சிம்மில் வேக வைக்கவும். (கடாயில் வேக வைத்தால் தண்ணீ­ர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.)

* சிக்கன் வெந்தவுடன், குக்கரை திறந்து வைத்து மூடாமல் அதில் மீந்த தண்­ணீரை வற்ற விடவும்.

* சிக்கனை மசாலாவுடன் நன்கு பிரட்டி எடுக்கவும்.

* வெண்ணெயை கடாயில் உருக்கி, கறிவேப்பிலை, எடுத்துவைத்துள்ள பல்லாரியை நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.

* கறிவேப்பிலையும் பல்லாரியும் மொறுமொறுப்பாக வந்தவுடன் வெந்த சிக்கன் மசாலாவை கொட்டி நன்கு வதக்கவும்.

* வெண்ணெயுடன் சிக்கன் நன்கு வதங்கி எண்ணை கொப்பளிக்கும் வரை சுருள வதக்கி இறக்கவும்.
* வெண்ணெயில் சுருண்ட சிக்கன் டார்க் கலராகும். அதுவரைக்கும் அடிபிடிக்க விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

* மணமும் சுவையும் கொண்ட பட்டர் சிக்கன் ரெடி.

கோதுமைமாவு குழிப்பணியாரம்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 1
பெரிய வெங்காயம் - 1
பட்டாணி - கால் கப்
மிளகாய்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* உருளைக்கிழங்கையும் பட்டாணியையும் வேகவைக்கவும்.

* உருளைக்கிழங்கை தோல் உரித்து, வெங்காயம், மிளகாய்தூள், சிறிது உப்பு சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

* கோதுமை மாவில் உப்புப் போட்டுக் கரைத்துக் கொள்ளவும்.

* உருட்டி வைத்துள்ள மசாலா உருண்டைகளை, கோதுமை மாவில் தோய்த்து, குழிப்பணியாரக் கல்லில் எண்ணெய் விட்டு, போட்டு, திருப்பியதும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்க வேண்டும்.

முருங்கைக்காய் கூட்டு

தேவையான பொருட்கள்:

சிறிது நீளமாக நறுக்கிய முருங்கைக்காய் - 2 கப்
கடலைப்பருப்பு - கால் கப்
பாசிப்பருப்பு - கால் கப்
தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
சீரகம் - கால் டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீ ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் - ஒரு டீ ஸ்பூன்
கடுகு - கால் டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - கால் டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* குக்கரில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

* முருங்கைக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.

* பிறகு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து அதில் சேர்க்கவும்.

* கடைசியாக வெந்த பருப்புகளை அதில் சேர்த்து, தாளித்து இறக்கவும்.

காரச்சேவு

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கிலோ
டால்டா - 100 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
மிளகு தூள் - 2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சோடா மாவு, பெருங்காயப்பொடி - 1 டீ ஸ்பூன்
நசுக்கிய பூண்டு - சிறிதளவு
எண்ணெய் - 500 கிராம்

செய்முறை:

* எண்ணெய் தவிர அனைத்து பொருள்களையும் சிறிது நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காரச்சேவு அச்சில் பிழிந்து வெந்தவுடன் பிரித்து கொள்ளவும்.

ரிப்பன் பக்கோடா

தேவையான பொருள்கள்:

கடலை மாவு - 3 கப்
அரிசி மாவு - 1 கப்
மிளகாய் தூள் - 5 டீ ஸ்பூன் (அ) தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
சோடா மாவு - சிட்டிகை அளவு
எண்ணை பொரித்தெடுக்க
முறுக்குக் குழாய், ரிப்பன் அச்சு

செய்முறை:

* கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், சோடாமாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சலித்து வைத்துக்கொள்ளவும்.

* தேவையான அளவு நீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.

* காய்ந்த எண்ணை ஊற்றி மேலும் இலகுவாக பிசையவும்.

* (கடினமாக இல்லாமல் பிழிவதற்கு ஏற்றவாரு இலகுவாக இருக்க வேண்டும் அதேசமயம் பிசுபிசுப்பின்றி இருக்கவேண்டும்)

* கடாயில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் ரிப்பன் அச்சு கொண்டு எண்ணையில் பிழிந்து பொரிக்கவும்.

Wednesday, 4 July 2012

சீனி அதிரசம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
பால் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீ ஸ்பூன்
நெய் - 2 டீ ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

* பச்சரிசி மாவில் ஏலக்காய்த்தூளை கலந்து வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு மூழ்குமளவு நீர் வைத்து கொதிக்க வைக்கவும்.

* கொதிக்க ஆரம்பித்ததும் பாலை ஊற்றவும்.

* சிறிது நேரத்தில் பொங்கும் போது மேலோடு அழுக்கை எடுக்கவும்.

* பின் சிறிது கிண்ணத்தில் நீர் வைத்து சர்க்கரையை அதில் விட்டு பார்த்தால் உருண்டையாக நிற்கும்.

* அப்பொழுது பாகை அடுப்பிலிருந்து இறக்கி மாவை கொஞ்ச கொஞ்சமாக போட்டு கிளறி நெய் கலந்து வைக்கவும்.

* மறுநாள் ஒரு கவரில் எண்ணெய் தடவி சிறு உருண்டைகளாக எடுத்து தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பின்குறிப்பு:

* பச்சரிசி மாவு என்பது அரிசியை ஊறவைத்து நீரில்லாமல் வடிகட்டி நிழலில் உலர்த்தி மிக்ஸியில் மாவாக்கவும்.

* மிகவும் நைசாக இல்லாமலும், கொரகொரப்பாக இல்லாமலும் இருக்கணும்.

* குறிப்பிட்டிருக்கும் 2 கப் பச்சரிசி மாவு ஊறவைத்து அரைத்த மாவுதான்.

* மாவை எண்ணெயில் பொரிக்கும் போது தடிமனாக இல்லாமலும், மெல்லியதாக இல்லாமலும் தட்டவும்.

* மாவு தளர்த்தியாக இருந்தால் மீண்டும் அரிசியை ஊறவைத்து அரைத்து போட்டு கிளறி வைக்கவும்.

* மாவை கிளறி வைத்து உடனே சுடுவதை விட 2 நாள் வைத்திருந்து சுட நல்லாயிருக்கும்.

* இந்த அளவில் 7 அதிரசங்கள் வரும்.

பாசிப்பருப்பு பர்பி

தேவையான பொருட்கள்:

வறுத்த பாசிப்பருப்பு மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 3/4 கப்

செய்முறை:

* சர்க்கரை மூழ்கும் அளவு நீர் விட்டு ஒரு பாத்திரத்தில் ஒற்றை கம்பி பாகு வரும் வரை காய்ச்சவும்.

* இன்னொரு அடுப்பில் சிறு தீயில் நெய்யை சூடாக்கவும்.

* கம்பி பாகு வந்ததும் மாவை கட்டியில்லாமல் தூவி நன்கு கிளறி இறக்கவும்.

* ஒரு கரண்டியால் சூடான நெய்யை மாவில் கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி நன்கு கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.

* உடனே ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆறிய பிறகு துண்டுகள் போடவும்.

பின்குறிப்பு:

* கடையில் விற்கும் வறுத்த பாசிப்பருப்பு மாவை உபயோகித்தால் நன்றாகயிருக்கும்.

* ஒற்றை கம்பி பதம் என்பது 2 விரல்களுக்கிடையே ஒற்றை இழைபோல வரும். அதுதான் பர்பி செய்ய சரியான பதம்.

* தூளாக வந்த பர்பியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி லட்டுகளாக பிடிக்கவும்.

பொரி விளங்கா உருண்டை

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி - 1 படி (நன்றாக பொரிய வறுத்து அரைத்தது)
பொட்டுக்கடலை மாவு - 1/4 படி
தேங்காய் - 1 துருவியது

வெல்லப்பாகு தயாரிக்க:

வெல்லம் - 1 கிலோ
சுக்கு - ஒரு துண்டு
ஏலக்காய் - 4

செய்முறை:

வெல்லத்தை கொஞ்சம் தண்­ணீர் சேர்த்து சுக்கை தட்டி, ஏலக்காயை பிய்த்து போட்டு பாகு போல காய்ச்சி வடிகட்டி வைக்கவும்.

தேங்காய் துருவியதை நெய்யில் வறுத்து வைக்கவும்.

பின் அரிசிமாவு, பொட்டுக்கடலைமாவு, தேங்காய் அனைத்தும் கலந்து கொஞ்சம் வெல்லப்பாகை ஊற்றி உருண்டையாக பிடிக்கவும்.

சத்தான பொரி விளங்கா உருண்டை ரெடி.

முந்திரிக் கொத்து

பச்சைப்பயிறு உடலுக்கு வலுவைத் தரும் ஒரு அற்புதமான தானியம். இதை அடிக்கடி சேர்த்துக்கொள்வது உடம்புக்கு ரொம்ப நல்லது. அதுவும் வளரும் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லது... பச்சைப்பயரில் இப்படியொரு பலகாரமானு ஆச்சர்யப்படாமல் செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க.. பிரமாதம்னு அப்பறம் சொல்லுவீங்க........

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1/2 கிலோ
பச்சைப்பயிறு - 1/2 கிலோ
வெல்லம் - 1 கிலோ
ஏலக்காய் - 10
மைதா - 1/4 கிலோ
எண்ணெய் - 1/2 லிட்டர்
உப்பு - 1/2 டீ ஸ்பூன்

செய்முறை:

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து பச்சரிசி, பச்சைப்பயிறு ஆகிய இரண்டையும் தனித்தனியே வறுத்துக் கொள்ளவும்.

5 ஏலக்காயை மட்டும் எடுத்து தனியே வறுத்துக் கொள்ளவும்.

வறுத்த பச்சரிசி, பச்சைப்பயிறு, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மாவு மிஷினில் கொடுத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலி அல்லது வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து, வெல்லத்தை உடைத்துப் போட்டு, வெல்லம் மூழ்கும் வரை தண்ணீ­ர் விட்டு காயவிடவும்.

மீதமுள்ள 5 ஏலக்காயை தனியே வறுத்து பொடியாக்கி அடுப்பில் காய்ந்து கொண்டுள்ள வெல்லத்துடன் சேர்க்கவும்.

வெல்லம் கரைந்து பாகு கொதித்து பிசுபிசுப்பு பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, மிஷினில் அரைத்து வைத்துள்ள மாவை வாயகன்ற பாத்திரம் அல்லது பேசினில் சிறிது சிறிதாகப் போட்டு அதில் தேவையான அளவு பாகு சேர்த்து, கட்டியில்லாமல் சப்பாத்தி மாவு பதத்திற்கு, கையில் மாவு ஒட்டாமல் பிசையவும்.

பின்னர் மாவைச் சிறு சிறு உருண்டைகளாக, கோலி குண்டு அளவிற்குப் பிடித்துக் கொள்ளவும்.

தனியே ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன், உப்பு, தண்­ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும், தீயை மட்டுப்படுத்தி மிதமான தீயில் எரிய விடவும்.

பின்பு உருட்டி வைத்துள்ள உருண்டைகளை மூன்று மூன்றாக எடுத்து ஒன்றாகச் சேர்த்து, கரைத்து வைத்துள்ள மைதா மாவில் முக்கி வாணலியில் உள்ள எண்ணெயில் போட்டு வேக விடவும்.

ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபக்கம் வேக விடவும்.

மைதா மாவு தீய்ந்து விடாமல் எண்ணெயிலிருந்து எடுக்கவும்.

எண்ணெய் வடிந்ததும், சூடாகவும் சாப்பிடலாம், பத்து நாட்கள் வரை, காற்று புகாத டப்பாவில் பாதுகாத்து வைத்தும் சாப்பிடலாம்.

குறிப்பு:

பிசுபிசுப்பு பதம் என்பது பாகு காயும் போது பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலில் பாகை தொட்டு ஒட்டிப் பார்த்தால் பிசுபிசுவென்று ஒட்டும்.

மிஷினில் அரைத்த மாவு அனைத்தையும் ஒரே நேரத்தில் பிசையாமல் சிறிது சிறிதாக எடுத்துக் கொண்டு அதனுடன் பாகு சேர்த்து கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும்.

மூன்று உருண்டைகள் ஒன்றாகச் சேர்ந்து முந்திரிக் கொத்து போல் காட்சியளிப்பதால், இது அவ்வாறு பெயர் பெற்றுள்ளது. ஆனால் இதில் முந்திரி சேர்க்கப்படவில்லை என்பதுதான் இதன் விசேஷம்.

பச்சரிசி, பச்சைப்பயிறு, ஏலக்காய் ஆகியவற்றை மிக்சியில் அரைக்காமல் மாவு மிஷினில் அரைத்தால் மாவு மிகவும் வாசனையாக இருக்கும்.

மாங்காய் தக்காளி சாதம்

மாங்காய் சீசன் ஆரம்பிச்சாச்சு.. ஆஹா இனி சுவையான மாங்காய் வெரைட்டீஸ் செய்து சாப்பிடலாம். இப்போது ஈஸியான ரெசிபில தொடங்குவோம். சிம்பிளா செய்து சூப்பரா சாப்பிடுங்க........

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி - 2 கப்
சிறிய மாங்காய் - 1
பெரிய வெங்காயம் - 4
காய்ந்த மிளகாய் - 4
சாம்பார் பொடி - 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
தக்காளி - 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு - கடுகு, சிறிது கறிவேப்பிலை
தண்ணீ­ர், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

* அரிசியைக் கழுவி சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரித்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மாங்காய், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி சிறிது தண்­ணீர்விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.

* பத்து நிமிடத்திற்கு பிறகு இறக்கி ஆறியதும் சாதத்துடன் கலந்து பரிமாறவும். மாங்காய்த் தக்காளிச் சாதம் தயார்.

Tuesday, 3 July 2012

பனீர் வெஜ் மின்ட் கறி

எல்லா சத்தும் நிறைந்த இந்த கறி, குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற அருமையான சத்தான உணவு. சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கும் பனீர் ரொம்ப பிடிக்கும் என்பதால் இதை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள் பாருங்கள்!

தேவையான பொருட்கள்:

பட்டாணி - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
பனீர் - 100 கிராம்

வதக்கி அரைக்க

புதினா - ஒரு கட்டு
கொத்து மல்லி - அரை கட்டு
கருவேப்பிலை - கால் கட்டு
பச்ச மிளகாய் - நான்கு
இஞ்சி - ஒரு லெமென் சைஸ்
பூண்டு - 5 பல்
வெங்காயம் - முன்று
தக்காளி - நன்கு
எண்ணை - ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - தேவையான அளவு
சீரகம் - சிறிதளவு

செய்முறை:

* முதலில் எண்ணையை காயவைத்து வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்ச மிளகாயை வதக்கவும்.

* கடைசியாக கொத்துமல்லி, புதினா, கருவேப்பிலையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி அதையும் சேர்த்து வதக்கவும்.

* வதக்கியதை ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

* எண்ணையை காய வைத்து சீரகம் தாளித்து அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவேண்டும், அதோடு பனீரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

* காய்களை பொடியாக அரிந்து மைக்ரோ வேவில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

* இப்போது வெந்த காயை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

* சுவையான ஆரோக்கியமான மின்ட் கறி ரெடி.

காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா

வழக்கமா காலிப்ளவரோடு பட்டாணி சேர்த்து தான் சமைச்சிருப்போம்... அதில் பனீர் சேர்த்து செஞ்சா சுவை மிகவும் அபாரமா இருக்கும்.. ட்ரை பண்ணிப் பார்த்திட்டு ஆஹா அற்புதம்னு சொல்லுவீங்க பாருங்க....!

தேவையான பொருட்கள்:

மசாலா அரைத்துக்கொள்ள:

வெங்காயம் - 2
பேல் பூரி - 1
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 5
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை

செய்முறை:

* வெங்காயம், பேல் பூரி, மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், மஞ்சள்பொடி ஆகியவற்றை சுடுநீரில் ஊற வைத்து, கெட்டிவிழுதாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* காலிப்ளவர் பெரிய துண்டுகளாக, சுத்தப்படுத்தி, உரித்த பட்டாணி 2 கப் சேர்த்து, தண்ணீரில் இரண்டையும் கொதிக்க விடவும்.

* வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணை வைத்து சூடானதும், ஒரு துண்டு பட்டை புளி, கிராம்பு, 1 ஸ்பூன் சோம்பு பொரித்து, அத்துடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து, தணிந்த தீயில் எண்ணை பிரிந்து வரும் வரை வதக்கவும்.

* பிறகு கொதிக்க வைத்த காலிப்ளவர், பட்டாணி சேர்த்து, உப்பு, 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

* தக்காளி சாஸ் அரை கப், கலந்து, சில நிமிடம் கிளறியதும் கொத்தமல்லி, கருவேப்பிலை தூவி, சூடாக பரிமாறவும்.

* பட்டாணி சேர்த்த பின் பனீர் துண்டுகளும் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

* இந்த மசாலா எல்லா வகை சாதம், டிபன் வகைகளுக்கும் மிகவும் நன்றாக இருக்கும்.

பால் கொழுக்கட்டை

சாதாரண கொழுக்கட்டையாவே சாப்பிடுறதுக்கு போரடிக்குதா... இந்த ஸ்பெஷல் பால் கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க! மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும்... சிறுசு, பெருசு என அனைவரின் நாவையும் சுண்டி இழுக்கும் இந்த ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை.

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி மாவு - 2 கப்
தேங்காய்ப்பால் (முதல் பால்) - 1 கப்
அடுத்ததாக எடுக்கும் தேங்காய்ப்பால் - தேவைக்கு
பால் - 3 கப்
சர்க்கரை - 2 1\2 கப்
ஏலக்காய் - 4
முந்திரி, திராட்சை - தேவைக்கு
நெய் - 5 டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை:

* பாலை நன்றாகக் காய்ச்சவும்.

* அரிசி மாவில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் தனியே எடுத்துவிட்டு மீதமுள்ள மாவில் காய்ச்சிய பாலை விட்டு, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும்.

* சிறிது உப்பு சேர்க்கவும்.

* பிசைந்த மாவைச் சிறுசிறு உருண்டைகளாக நீண்ட வடிவத்தில் பிடித்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு, இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப்பாலை ஊற்றி, சர்க்கரை கரைய வைத்து நீர்த்த பாகாக்கவும்.

* பிறகு எடுத்து வைத்த அரிசி மாவை சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும்.

* சிறிது கெட்டியாக பாயசம் போலவரும், இச்சமயம் ஆவியில் வேக வைத்ததைப் போட்டு கிளறிவிடவும்.

* பின்னர், பால், தேங்காய்ப்பால் - இரண்டையும் ஊற்றி ஒரு கொதி வந்ததும் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துப் போட்டு, ஏலக்காயைப் பொடி செய்து போட்டு இறக்கி வைக்கவும்.

* நெய்யையும் ஊற்றி மூடி வைக்கவும். சாப்பிட ருசியோ ருசி!

இதன் சிறப்பு:

* ஆவியில் வேக வைத்ததால் உடல்நலத்துக்கு உகந்தது.

* தேங்காய்ப்பால், பால் கலவையுடன் ஏலக்காய், நெய் வாசனை சேர்ந்து சாப்பிடத் தூண்டும்.

* பாயசங்களையே மாற்றி மாற்றி வைக்காமல் இப்பழமையான பால் கொழுக்கட்டை செய்தும் விருந்தினரை வியக்க வைக்கலாம்.

சுறா மீன் புட்டு

மீன் குழம்பு, வறுவல், பொரியல்னு செஞ்சு செஞ்சு அலுத்துப்போச்சு. 'குழந்தைகளுக்கு சத்தான மீன் கொடுக்கணும்னு ஆசை ஆனா முள் இருக்கிறதால சாப்பிட பயப்படுறாங்க. என்ன செய்றதுனு' புலம்பும் தாய்மார்களுக்கு இதோ ஈஸியான சுறா புட்டு, முள்ளுங்கிற பேச்சுக்கே இடமில்ல... உங்க குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.. செய்து கொடுத்து அசத்துங்க.....

தேவையான பொருட்கள்:

சுறா மீன் துண்டு - 300 கிராம்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 3 அல்லது 4
பூண்டு (பொடியாக நறுக்கியது) - 6 பல்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
மல்லித் தழை - சிறிது
முழு உளுந்து - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1/2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* சுறா மீன் துண்டுகளை சூடான நீரில் போட்டு 10-15 நிமிடங்கள் வேக வைக்கவும்.

* அதனுடன் மஞ்சள் சேர்க்கவும்.

* மீன் துண்டுகள் வெள்ளை நிறத்தில் மாறிவிட்டால் அது வெந்து விட்டது என்று அர்த்தம்.

* மீன் துண்டுகளை தனியாக எடுத்து பரலாக(அதாவது) உதிரியாக உதிர்த்து வைக்கவும்.

* கடாயை சூடாக்கவும்.

* அதில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பின்பு முழு உளுந்து மற்றும் சீரகம் சேர்த்து வறுக்கவும்.

* அதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

* நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதனுடன் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

* உதிர்த்து வைத்துள்ள சுறா மீனை அத்துடன் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறவும்.

* உப்பு சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.

* நறுக்கி வைத்துள்ள மல்லித் தழை சேர்த்து பரிமாறவும்.

தேங்காய் மட்டன் பிரட்டல்

எளிமையா ஒரு மட்டன் ஃபிரை வேணும்னா.. இந்த மட்டன் பிரட்டல் செஞ்சு பாருங்க. சுவையும் மணமும் சும்மா தூக்கலா இருக்கும். ரொம்ப சிக்கனமானதும் கூட. எல்லா நாட்களிலும் செய்யலாம். எல்லா சாப்பாட்டோடும் ஒத்துப்போகும் சூப்பரான சைட் டிஷ் இது!

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ
சிறிய வெங்காயம் - 15
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தேங்காய் - 1/4 மூடி
மிளகு தூள் - சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்ட மிளகாய் - 5
கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை:

* வெங்காயத்தை இரண்டிரண்டாக நறுக்கவும்.

* தேங்காயை மெல்லிய சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.

* கொடுத்துள்ள பொருட்கள் (மிளகை தவிர) எல்லாவற்றையும் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.

* கடைசியில் மிளகு தூள் சேர்த்து சுருள வதக்கி இறக்கவும்.

* எண்ணைய் நல்லா சூடானதும் கறிவேப்பிலை, பட்ட மிளகாய் பொரித்து, கறி மீது ஊற்றி நன்கு பிரட்டவும்.

Monday, 2 July 2012

வான்கோழி பிரியாணி

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி (அ) ஜீரக சம்பா பச்சரிசி - 3 கப்
வான்கோழியின் பக்கவாட்டு பாகங்கள் - 900 கி
மஞ்சள் பொடி - 1/4 டீ ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 2
நறுக்கிய கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி
நறுக்கிய புதினா இலை - 1 கைப்பிடி
இஞ்சி பேஸ்ட் - 2 டீ ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 1 டீ ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டீ ஸ்பூன்
தேஜீபட்டா (லவங்க செடியிலை) - 2
லவங்கப்பட்டை - 2 அங்குலம்
ஏலக்காய் - 2
லவங்கம் - 4
தயிர் - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 2 டீ ஸ்பூன்
நறுக்காத பச்சைமிளகாய் - 5
எலுமிச்சை - 1
முந்திரிப்பருப்பு - 10
உலர்ந்த திராட்சை - 10
குங்குமப்பூ கலர் - 2 துளி
ரோஜா எஸன்ஸ் - 2 துளி
பால் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* வான்கோழி பிரியாணியின் சுவை அதிகரிக்க வான்கோழி மாமிசத்தை ஒரு நாள் முன்பு மசாலாக்களில் தோய்த்து வைக்க வேண்டும். சரியாக சமைக்கும் முன்பு 24 மணி நேரம் தான் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த மாமிசத்தை ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லது. இதை செய்யும் முறை -

* வான்கோழி மாமிச பாகங்களை நன்றாகக் கழுவி பெரிய துண்டுகளாக வெட்டவும்.

* அதன் மேல் 1/4 கரண்டி மஞ்சள் பொடியை தடவவும்.

* பிறகு 1 கப் தயிர் அதில் 2 டீ ஸ்பூன் மிளகாய்ப்பொடி, கரம் மசாலாப் பொடி, 1 டீ ஸ்பூன் இஞ்சி பேஸ்ட், 1/2 டீ ஸ்பூன் பூண்டு பேஸ்ட், 2 டீ ஸ்பூன் உப்பு, 1/2 மூடி எலுமிச்சைபழச்சாறு இவற்றை கலந்து அதில் வான்கோழி மாமிசத்தை தோய்த்து வைக்கவும். ஒரு பாலித்தீன் பையில் மூடி ஒரு மூடிய பாத்திரத்தில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

க்ரேவி செய்முறை:

* அடிகனமான வாணலியில் 3 டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை காய்ச்சவும்.

* பெருஞ்சீரகம், லவங்கப்பட்டை, ஏலக்காய், லவங்கம், தேஜீபட்டா இவற்றை சேர்க்கவும்.

* பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பாதியை எடுத்து தனியாக வைக்கவும்.

* இப்பொழுது நறுக்கிய தக்காளி சேர்த்து எண்ணெய் கசியும் வரை வதக்கவும்.

* மீதியுள்ள இஞ்சி, பூண்டு பேஸ்ட்டுகளை போட்டு நன்றாக கலந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இப்பொழுது ஃப்ரிட்ஜில் வைத்த வான்கோழி மாமிசங்களை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

* பிறகு ப்ரஷர் குக்கரில் போட்டு நான்கு விசில் வரும் வரை வேக விடவும். அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

அரிசியை சமைக்கும் முறை:

* அரிசியை கழுவி அரை மணிநேரம் ஊற விடவும்.

* அடுப்பில் பத்து கப் தண்ணீரை கொதிக்க விடவும். அத்துடன் எலுமிச்சை சாறு, 2 டீ ஸ்பூன் உப்பு சேர்த்து கிளறவும்.

* பிறகு ஊற வைத்த அரிசியை சேர்க்கவும். பாதி வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி நீரை வடிகட்டவும். வடிகட்டிய அரிசியை தனியே வைக்கவும்.

அலங்கரிக்க:

* முந்திரிப்பருப்பையும், உலர்ந்த திராட்சையையும் ஒரு வாணலியில் ஒரு டீ ஸ்பூன் நெய் விட்டு வதக்கவும். தனியே எடுத்து வைக்கவும்.

பிரியாணி அடுக்குகளை தயாரித்தல்:

* ஒரு பேக்கிங் தட்டை எடுத்து அதில் பாதி அரிசியை பரவலாக நிரப்பவும்.

* இதன் மேல் வான்கோழி கிரேவியை பரப்பவும்.

* மறுபடியும் இன்னொரு அடுக்கு அரிசியை பரவலாக நிரப்பவும்.

* இதன் மேல் நறுக்கிய புதினா இலை, நறுக்கிய கொத்தமல்லி, நறுக்காத பச்சை மிளகாய், வதக்கிய வெங்காயம், முந்திரிப்பருப்பு, மற்றும் உலர்ந்த திராட்சையை பரப்பவும்.

* 2 டீ ஸ்பூன் பாலுடன் இரு துளிகள் ரோஜா எஸன்ஸையும், குங்குமப்பூ கலரையும் கலக்கவும்.

* இதை அரிசியின் மேல் பாகத்தில் தூவவும்.

* இவற்றின் மேல் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை தடவவும்.

* தட்டை ஒரு அலுமினிய ஃபாயிலால் மூடவும். முன்பே சூடுபடுத்திய அவனில் 350 டிகிரி எஃப் சூட்டில் ஒரு மணி நேரம் சமைக்கவும்.

* வான்கோழி பிரியாணியை சூடாக வெங்காய பச்சடியுடனும், கோழி கிரேவியுடனும் பரிமாறலாம்.

Saturday, 9 June 2012

வெண்டைக்காய் சாம்பார்

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு - 150 கிராம்
வெண்டைக்காய் - 1/4 கிலோ
பெ.வெங்காயம் - 1
ப.மிளகாய் - 3
தக்காளி - 3 (மீடியம் சைஸ்)
புளி - 25 கிராம்
சாம்பார் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு

தாளிக்க:

சி.வெங்காயம் - 5
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, உளுந்து - தேவையான அளவு
கருவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

* பருப்பை வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

* வெண்டைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு எண்ணெய்விட்டு வதைக்கி வைத்துக்கொள்ளவும்.

* வேக வைத்த பருப்பில் சாம்பார் பொடியை போட்டு புளிக்கரைசலை விட்டு தக்காளி, வெங்காயம், ப.மிளகாய் ஆகியவைகளை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பிறகு வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பிறகு கடுகுஉளுந்து, கருவேப்பிலை, சி.வெங்காயம், ஆகியவைகளை சேர்த்து தாளிக்கவும்.

* தாளித்தவுடன் தேங்காய் துறுவலை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.

* பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்தமல்லியை சேர்க்கவும்.

* கமகமக்கும் சுவையான சாம்பார் ரெடி.

* அப்பறென்னங்க ஒங்க வீடே ஒரே சாம்பார் வாசனையாதான் இருக்கும்.

தக்காளி அவல்

தேவையான பொருட்கள்: (2 பேருக்கு)

அவல் - 1 கப்
தக்காளி - 1
பச்சைப் பட்டாணி - 1/2 கப் (வேகவைத்தது)
கேரட் - 1 சிறியது
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகாய் வத்தல் - 3
பெருங்காயம் - 1 சிட்டிகை
மஞ்சள் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீ ஸ்பூன்
உளுத்தப்பருப்பு - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1 டீ ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 மூடி

செய்முறை:

* அவலுடன் மஞ்சள், எலுமிச்சைச் சாறு, உப்பு, சிறிது நீர் சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

* பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.

* பெரிய வெங்காயம், தக்காளி, கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்.

* எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு, கடலை, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.

* பிறகு பட்டாணி, நறுக்கி வைத்த அனைத்தையும் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும். அதனுடன் பருப்பு, ஊறவைத்த அவலை சேர்த்து நன்கு கிளறவும். பெருங்காயம் சேர்த்து இறக்கவும்.

* சுவையான தக்காளி அவல் தயார்.

Friday, 8 June 2012

கேரட் சாலட்

தேவையான பொருட்கள்:

துருவிய கேரட் - 1 கிலோ
முளைக்கட்டிய பச்சைப்பயறு - 1/4 கிலோ
தேங்காய்த் துருவல் - 1 கப்
எலுமிச்சம்பழம் - 1
நறுக்கிய குடை மிளகாய் - 50 கிராம்
நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கட்டு
உப்பு, மிளகுப்பொடி - தேவைக்கு ஏற்ப

செய்முறை:

* திருகிய கேரட், முளைகட்டிய பச்சைப்பயறு, தேங்காய்த் துருவல், நறுக்கிய குடை மிளகாய், கொத்தமல்லி இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.

* அதன் மீது எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து சேர்த்து, உப்பு, மிளகுப்பொடி கலந்து மீண்டும் கலக்கவும்.

* ஆரோக்கிய குளிர்ச்சியான உணவு ரெடி!

பனீர் வெஜ் மின்ட் கறி

தேவையான பொருட்கள்:

பட்டாணி - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
பனீர் - 100 கிராம்

வதக்கி அரைக்க

புதினா - ஒரு கட்டு
கொத்து மல்லி - அரை கட்டு
கருவேப்பிலை - கால் கட்டு
பச்ச மிளகாய் - நான்கு
இஞ்சி - ஒரு லெமென் சைஸ்
பூண்டு - 5 பல்
வெங்காயம் - முன்று
தக்காளி - நன்கு
எண்ணை - ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - தேவையான அளவு
சீரகம் - சிறிதளவு

செய்முறை:

* முதலில் எண்ணையை காயவைத்து வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்ச மிளகாயை வதக்கவும்.

* கடைசியாக கொத்துமல்லி, புதினா, கருவேப்பிலையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி அதையும் சேர்த்து வதக்கவும்.

* வதக்கியதை ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

* எண்ணையை காய வைத்து சீரகம் தாளித்து அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவேண்டும், அதோடு பனீரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

* காய்களை பொடியாக அரிந்து மைக்ரோ வேவில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

* இப்போது வெந்த காயை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

* சுவையான ஆரோக்கியமான மின்ட் கறி ரெடி.

Thursday, 7 June 2012

வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1/2 கப்
வெந்தயக்கீரை - 2 கட்டு
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து, குழையாமல் வேகவையுங்கள்.

* கீரையை சுத்தம் செய்யுங்கள்.

* பூண்டு, வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்குங்கள்.

* எண்ணெயைக் காய வைத்து கடுகு, சீரகம் தாளித்து பூண்டு சேருங்கள்.

* பூண்டு வதங்கியதும் வெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்கள்.

* அத்துடன் கீரை, மிளகாய்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, பருப்பை சேருங்கள்.

* சிறு தீயில் நன்கு வதக்கி எடுக்கும்பொழுது எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து கிளறி இறக்குங்கள்.

* தண்ணியாக இல்லாமல் சிறிது கெட்டியாக இருப்பதுதான், ஸ்பெஷல்.